அவர் கொடுத்த காதல் கடிதத்தை பத்திரமா வச்சிருக்கேன் – கீர்த்தி சுரேஷ்.

0
1421
keerthi
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்தில் முன்னணி நாயகியாக உயர்ந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமான கீர்த்தி சுரேஷ் தற்போது ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். தனது அழகாலும், திறமையான நடிப்பாலும் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தவர். தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து உள்ளார். தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-
keerthi-suresh

அதிலும் கீர்த்திசுரேஷ் தெலுங்கில் நடித்த மகாநதி திரைப்படம் கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருதை வாங்கிக் கொடுத்தது அதைத்தொடர்ந்து அம்மணியின் புகழ் கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் நடிப்பதாக இருந்த படம் கைநழுவி போனது இருப்பினும் பாலிவுட்டில் இன்னொரு படத்தில் நடித்து வருகிறார் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கீர்த்தி சுரேஷ் தனக்கு வந்த காதல் கடிதம் குறித்து பேசியிருக்கிறார் இது குறித்து அவர் பேசியதாவது,

- Advertisement -

நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது என் தீவிர ரசிகர் ஒருவர் எனக்கு கிப்ட் கொடுத்தார். அந்த கிப்டை திறந்து பார்த்தபோது, அதில் என் புகைப்படங்கள் அடங்கிய ஆல்பம் மற்றும் ஒரு காதல் கடிதம் இருந்தது. என் மீது கொண்ட காதலை அவர் அந்த கடிதத்தில் வெளிப்படுத்தியதுடன், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியிருந்தார். நான் கல்லூரியில் படித்தபோது ஒருவர் கூட எனக்கு காதல் கடிதம் கொடுத்ததில்லை. அதனால் அந்த ரசிகர் கொடுத்த காதல் கடிதத்தை தூக்கிப் போட மனமில்லாமல் பத்திரமாக வைத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் சூப்பர் ஸ்டாரின் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. `முள்ளும் மலரும்’ படம்போல ரஜினி நடிக்கும் அண்ணண் – தங்கச்சி சென்ட்டிமென்ட் கதை இது. ரஜினிக்குத் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ரஜினியின் மனைவியாக நயன்தாராவும், ரஜினியின் முறைப்பெண்களாக குஷ்புவும், மீனாவும் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement