‘காலு மேல கால போடு ராவண குலமே’ – ‘ப்ளூ ஸ்டார்’ படவிழாவில் கீர்த்தி பாண்டியன் பேச்சு(ரஞ்சித் படத்துல நடிச்சாலே இப்படி பேசணுமோ?)

0
387
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்கிறார் பா. ரஞ்சித். இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியை வைத்து வட சென்னையை கதைக்களமாக கொண்டு மெட்ராஸ் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா போன்ற படங்களை இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-

இவ்விரு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகி இருந்த சார்பட்டா பரம்பரை படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வெற்றியை பெற்றது. பின் இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராமன், துஷாரா விஜயன் படத்தில் இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

- Advertisement -

ரஞ்சித் திரைப்பயணம்:

தற்போது விக்ரம் அவர்கள் பா ரஞ்சித் இயக்கத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து இருக்கிறார். கேஜிஎஃப்பில் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் கதையாக இந்த படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது. இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆவலாக காத்து கொண்டு இருக்கிறார்கள். மேலும், இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் பல படங்களை தயாரித்தும் இருக்கிறார்.

ப்ளூ ஸ்டார்:

மேலும், இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் தற்போது பா. ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ப்ளூ ஸ்டார். இந்த படத்தை இயக்குனர் ஜெயக்குமார் இயக்கியிருக்கிறார் இந்த படத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி, பிரித்விராஜன், பகவதி பெருமாள் உட்பட பல நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

-விளம்பரம்-

இசைவெளியீட்டு விழா:

மேலும், இந்த படம் 25ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை ராயப்பேட்டை சத்தியம் திரையரங்கில் நடைபெற்றிருக்கிறது. இந்த விழாவில் பா ரஞ்சித், அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் உட்பட குழுவினர் பலருமே கலந்து கொண்டிருந்தார்கள்.
அப்போது விழாவில் பேசிய கீர்த்தி பாண்டியன், பா ரஞ்சித் அண்ணாவின் பெயர் இடம் பெற்றாலே அரசியல் பற்றி பேச ஆரம்பித்து விட்டீர்களா? என்று கேட்கின்றார்கள். அரசியல் பேசினால் என்ன தப்பு? நாம் அணிந்திருக்கும் துணியில் இருந்து குடிக்கும் தண்ணீர் வரை அனைத்திலும் அரசியல் இருக்கிறது.

ரஞ்சித் குறித்து சொன்னது:

அதை பற்றி நான் பேசவில்லை என்றால் அது இல்லை என்று அர்த்தம் கிடையாது. அதை நீங்கள் பேச தவிர்க்கிறீர்கள் என்று அர்த்தம். இந்த படத்திலும் அரசியல் இருக்கிறது. ரஞ்சித் அண்ணா தயாரிக்கும், இயக்கும் படங்களில் அவர் சொல்கிற விஷயம் ரொம்ப முக்கிய.ம் அந்த விதத்தில் என்னுடைய குரலை இந்த படத்தில் பயன்படுத்துவதை பெருமையாக நினைக்கிறேன். இன்றைக்கு இந்த நாளில் இந்த விழா நடப்பது மிக முக்கியமானது. மேலும், தெருக்குரல் அறிவு வரிகளில் இந்த படத்தில் வரும் ‘அரக்கோணம் ஸ்டைல்.பாடலில் வரும் ‘காலு மேல கால போடு ராவண குலமே, மேல ஏறும் காலமாச்சு ஏறியாகணுமே என்ற வரி வரும்.

Advertisement