1949 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பு பக்கத்தில் – பார்வதி பதிவுக்கு குவியும் பாராட்டு

0
467
- Advertisement -

ராமர் கோயில் திறப்பு விழா குறித்து நடிகை பார்வதி பதிவிட்டு இருக்கும் பதிவு தான் தற்போது சோசியல் மீடியாவில் பாராட்டை பெற்று வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாப்பிக்கே அயோத்தி ராமர் கோயில் குறித்த செய்தி தான். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருக்கும் ராமர் கோவில் அனைவரும் அறிந்ததே. இந்தக் கோவில் நாட்டின் பாரம்பரியம் மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கட்டப்பட்டிருக்கிறது.

-விளம்பரம்-

ஸ்ரீராம் உள்நாட்டு தீர்த்தத்தின்படி இராமன் கோயில் மூன்று அடுக்குகளை கொண்ட தளம். ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் உள்ளது. மொத்தம் 392 தூண்களையும், 44 கதவுகளையும் இந்தக் கோயில் கொண்டுள்ளது. மேலும், அயோத்தியில் ராமர் கோயிலுக்கு செல்லும் நுழைவாயிலில் யானைகள், சிங்கங்கள், அனுமான் மற்றும் கருடா போன்ற சிலைகள் இருக்கிறது. பாரம்பரிய முறையில் இந்த கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இப்படி புகழ்பெற்ற அயோத்தி ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

- Advertisement -

அயோத்தி ராமர் கோவில்:

ஆயிரக்கணக்கான பக்தர்களின் கனவு நினைவாகி இருக்கிறது. இந்தியா நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான முழுவதும் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை காண வருகை தந்துள்ளனர். இந்த தினத்தில் அனைவருமே வீடுகளில் விளக்கேற்ற வேண்டும் என்று இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார். இதனால் பெரும்பாண்மையான வீடுகளில் விளக்கு ஏற்றப்பட்டு இருந்தது. மேலும், பொதுமக்கள் மட்டுமல்லாது ஏகப்பட்ட சினிமா பிரபலங்களும் இந்த விழாவில் கலந்து கொண்டு இருக்கின்றனர்.

விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள்:

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 7000க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்வு பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெற்றிருக்கிறது. இந்த விழாவில் அரசியல் தலைவர்கள், இந்திய சினிமாவின் பிரபல பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். அந்த வகையில் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், மாதுரி தீக்ஸிட், ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட், விக்கி கவுசல் மற்றும் கத்ரீனா கைஃப், கங்கனா ரனாவத், சச்சின் என பலர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

நடிகை பார்வதி பதிவு:

மேலும், இந்த நிகழ்விற்கு பலர் ஆதரவு தெரிவித்துக் கொடுத்தாலும் சிலர் எதிர்ப்புகளை கொடுத்து தான் வருகிறார்கள். இந்த நிலையில் நடிகை பார்வதி தன்னுடைய சோசியல் மீடியாவில் இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பு பக்கத்தை பதிவிட்டு, 1949 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பு பக்கத்தில் இறையாண்மை, சமத்துவம், மத சார்பின்மை மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் ஒரு நாடக இந்தியா எப்போதும் இருக்கும் என்று பதிவிட்டு இருக்கிறார். தற்போது இந்த பதிவை தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

நடிகை பார்வதி குறித்த தகவல்:

மலையாளத்தில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பார்வதி மேனன். இவர் தமிழில் 2008 ஆம் ஆண்டு வெளியான ‘பூ’ படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகி இருந்தார். அதன் பின் இவர் சில தமிழ் படங்களில் மட்டும் நடித்தார். ஆனால், இவர் மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது இவர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் தங்கலான் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது.

Advertisement