எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் வாய்ப்பு இருக்கு என்று கீர்த்தி சுரேஷ் கூறியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் குறுகிய காலத்தில் பெரிய நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக கீர்த்தி சுரேஷ் திகழ்ந்து வருகிறார். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
சமீபகாலமாகவே இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ரகு தாத்தா’. இந்தப் படத்தை இயக்குனர் சுமன் குமார் எழுதியிருக்கிறார். இவர் ஏற்கனவே ‘தி பேமிலி மேன்’ என்ற வெப் சீரியஸை எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த கேஜிஎஃப், காந்தாரா படங்களை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
ரகு தாத்தா படம்:
தமிழில் இதுதான் இவர்களுடைய முதல் படம். மேலும், இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடன் இந்த படத்தில் எம். எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய ட்ரெய்லர் வெளியாகி இருந்தது. அந்த ட்ரெய்லர் முழுக்க ஹிந்தி திணிப்பு விவாகரத்தை தான் பேசப்பட்டு இருக்கிறது.
ரகு தாத்தா ட்ரெய்லர்:
ட்ரெய்லர் ஆரம்பத்தில் கீர்த்தி சுரேஷ், ஹிந்தியை திணிக்காதே, ஹிந்தி எக்ஸாம் எழுதுனாதான் எனக்கு ப்ரமோஷன் கிடைக்குன்மா? எனக்கு ப்ரோமோஷன் வேண்டாம். ஹிந்தி தெரியாது போயா என்று ஹிந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேசி இருப்பார். இதனால் இந்த ட்ரெய்லர் சோசியல் மீடியாவில் சுலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், கீர்த்தி சுரேஷ் இப்படம் ஹிந்தி திணிப்பை பற்றி எல்லாம் பேசவில்லை. பெண்கள் மீதான திணிப்பை பற்றி தான் பேசுகிறது என்று கூறியிருந்தார்.
ரகு தாத்தா ப்ரோமோஷன் :
தற்போது இப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில், மதுரையில் நடந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டு படத்தின் ட்ரெய்லரை சிறுமிகளுடன் பார்த்து ரசித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கீர்த்தி சுரேஷ், ‘ரகு தாத்தா ஹிந்தி திணிப்பு தொடர்பான படம், தமிழ்நாட்டில் மட்டும்தான் இது போன்ற படத்தை பற்றி பேச முடியும்’. என்னை ஹிந்திக்கு எதிராக பேசிவிட்டு ஹிந்தியில் நடிப்பதாக சிலர் விமர்சனம் செய்கின்றனர்.
அரசியல் குறித்து :
ஆனால், ‘ஹிந்தி மொழியை இப்படம் எதிர்க்கவில்லை. ஹிந்தி திணிப்பு கூடாது என்பதே இப்படத்தின் கருத்து’ என்று கூறியுள்ளார். பின் அரசியல் குறித்த கேள்விக்கு, இப்போதைக்கு நான் எந்த அரசியலுக்கும் வரவில்லை. இப்போதைக்கு நமக்கு நடிப்புதான் என்றார். பின், விஜய் கட்சியில் சீட்டு கொடுத்தால் அரசியலுக்கு வருவீங்களா என்று பத்திரிகையாளர்கள் கேட்க, ‘வரலாம், வராமலும் போகலாம். அரசியலுக்கு வர மாட்டேன் என்று இப்போ சொல்லிவிட்டு, அப்புறம் நான் வந்து விட்டால், அப்போ வரமாட்டேன்னு சொன்னீங்கன்னு நீங்க கேள்வி கேட்பீங்க அதனால்தான் என்று கீர்த்தி சுரேஷ் சூசகமாக பதில் கூறியுள்ளார்.