தல பொங்கல் குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்தில் பெரிய நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு,ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
மேலும், நடிகை கீர்த்தி சுரேஷ் பழம்பெரும் நடிகை சாவித்ரி அவர்களின் வாழ்க்கை வரலாறு படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றிருந்தார். தற்போது இவர் பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் வெளியான ‘பேபி ஜான்’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் தமிழில் வெளியான ‘தெறி ‘படத்தின் ரீமேக் ஆகும். வருண் தவான் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தை இயக்குனர் அட்லி தயாரித்திருந்தார்.
கீர்த்தி சுரேஷ் குறித்த தகவல்:
பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதற்கிடையில் நடிகை கீர்த்தி சுரேஷ்- ஆண்டனி தட்டில் இருவரும் 15 வருடமாக காதலித்து வந்து இருந்தார்கள். தற்போது ஆண்டனி துபாயில் செட்டில் ஆகி இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இதை கீர்த்தி சுரேஷ் உறுதி செய்து இருந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி கோவாவில் பிரம்மாண்டமாக கீர்த்தி சுரேஷின் உடைய திருமணம் நடைபெற்று இருந்தது.
கீர்த்தி சுரேஷ் திருமணம்:
இவர்கள் திருமணம் இந்து,கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்று இருந்தது. மேலும், இந்த திருமணத்தில் விஜய், அட்லீ உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் பல உறவினர்கள் மற்றும் நண்பர்களும் இந்த திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியிருந்தார்கள். திருமணம் முடிந்த கையோடு இவர் மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் கீர்த்தி சுரேஷ், உண்மையை சொல்ல வேண்டும் என்றால் திருமணத்திற்கு பின் என்னுடைய வாழ்க்கையில் பெரிதாக எதுவும் மாறவில்லை.
கீர்த்தி சுரேஷ் பேட்டி:
இந்த கல்யாணத்தின் மூலம் எங்கள் மீது தான் கவனம் திரும்பி இருக்கிறது. எனக்கு அது பழகி விட்டது. ஆனால், ஆண்டனி அப்படி கிடையாது. இது அவருக்கு கொஞ்சம் புதுசு. திருமணத்தின் மூலம் இரண்டு குடும்பங்கள் ஒன்றாக இருந்தது தான் இங்கு வித்தியாசப்பட்டு இருக்கிறது. நாங்கள் நீண்ட காலமாக ஒன்றாக இருந்தால் எங்கள் இருவருக்கும் இடையில் பெரிய மாற்றம் எல்லாம் இல்லை. ஆனால், இரண்டு குடும்பங்கள் இணைந்து இருப்பது தான் எங்களுக்கு வித்தியாசமும், அழகாகவும் இருக்கின்றது. மேலும், எங்கள் திருமணத்திற்கு பின் வரும் முதல் பொங்கல். இதனை இன்னும் சிறப்பு வாய்ந்ததாக மாற்றி இருக்கிறது. இது எனக்கு தல பொங்கல்.
பொங்கல் குறித்து சொன்னது:
இந்த பொங்கலை திருவனந்தபுரத்தில் எங்கள் வீட்டில் கொண்டாடினோம். இது முழுக்க முழுக்க குடும்பத்திற்கான நேரம். பொங்கல் எல்லோருக்குமே சிறப்பு வாய்ந்த பண்டிகை. காரணம், அது புத்தாண்டுக்கு பிறகு வரும் முதல் பண்டிகை. ரொம்ப அழகானது, அறுவடை கொண்டாட்டம், விவசாயிகள் நமக்காக என்ன செய்கிறார்கள் என்பதற்கான கொண்டாட்டம். நம் தட்டில் இருக்கும் அனைத்துமே அவர்கள் நமக்காக செய்பவை தான். தனிப்பட்ட மற்றும் என்னுடைய தொழில் முறை வாழ்க்கை பொறுத்தவரையும் 2024 எனக்கு ரொம்ப சிறந்ததாக அமைந்தது. திருமணம் முடிந்து நான் வேலைக்கும் திரும்பி வந்துவிட்டேன் என்று கூறி இருக்கிறார்