படு ஸ்லிம்மாக மாறிய கீர்த்தி சுரேஷ். கையில் கோப்பையுடன் கொடுத்த போஸ்.

0
30512
keerthi-suresh
- Advertisement -

-விளம்பரம்-

தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்தில் முன்னணி நாயகியாக உயர்ந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். 2000ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமான கீர்த்தி சுரேஷ் அவர்கள் ‘கீதாஞ்சலி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தனது அழகாலும், திறமையான நடிப்பாலும் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தவர். இவர் ரஜினிமுருகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தற்போது கீர்த்தி சுரேஷ் ரசிகர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்து வருகிறார்.

- Advertisement -

தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து உள்ளார். தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பழம்பெரும் நாயகி சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை “மகாநதி” என்று தெலுங்கில், “நடிகையர்-திலகம்” என்று தமிழில் படமாக எடுத்தார்கள். மேலும், நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் மகாநதி (தமிழில் நடிகையர்-திலகம்) படத்திற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

இதையும் பாருங்க : உதட்டருகில் முத்தம் கொடுக்கும் சாய் பல்லவி. திக்குமுக்காகும் சமந்தாவின் புருஷன். ரொமான்டிக் பாடலின் வீடியோ.

-விளம்பரம்-

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார் என்று பல கருத்துக்கள் சமூக வலைகளில் பரவியது. பாலிவுட்டில் நடிகர் அஜய் தேவ்கான் நடிக்கும் மெய்டன் என்ற படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் ஹிந்தியில் அறிமுகமாக இருந்தது. ஆனால், தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷுக்குப் பதிலாக நடிகை பிரியாமணியை ஒப்பந்தம் செய்து உள்ளார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஏனென்றால் கீர்த்தி சுரேஷ் அவர்கள் பார்ப்பதற்க்கு மிக இளமையாக தெரிவதாகவும், ஒப்பந்தத்தின் போது கீர்த்தி சுரேஷ் இருந்த உடல் எடையை விட தற்போது உடல் எடையை குறைத்து இருப்பதாகவும் தான் காரணம் என்று கூறப்பட்டது. இந்தி படத்திற்காக உடல் எடையை குறைத்த சமீபத்தில் கையில் கோப்பையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Advertisement