இந்தி திணிப்பை பற்றிய படம் – எப்படி இருக்கிறது ‘ரகு தாத்தா’- இதோ முழு விமர்சனம்

0
534
- Advertisement -

சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று பிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் தான் ‘ரகு தாத்தா’. இப்படத்தை புது இயக்குனர் சுமன் குமார் இயக்கியிருக்கிறார். இவர் ஏற்கனவே தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸில் கதை ஆசிரியராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் கீர்த்தியுடன் இணைந்து தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகியுள்ள படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதா? இல்லையா? என்பதை பார்ப்போம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் 1970களில் வாழும் முற்போக்கு சிந்தனை கொண்ட பெண்ணாக இருக்கிறார் கயல்விழி(கீர்த்தி சுரேஷ்). சிறுவயதிலிருந்தே ஹிந்தி திணிப்புக்கு எதிராக போராடும் இவர் தனது ஊரில் உள்ள ஏக்தா சபாவை மூடுகிறார். மேலும், தனது ஊரில் உள்ள அனைத்து பெண்களுக்கும் முன்மாதிரியாக விளங்குகிறார். வங்கியில் வேலை செய்யும் கயல்விழிக்கு திருமணம் முடிப்பதில் சுத்தமாக விருப்பம் இல்லை. ஆனால், தனது தாத்தாவின் ஆசைக்காக கயல்விழி திருமணத்திற்கு சம்மதிக்கிறார். பின் வீட்டில் வரன் பார்க்க தொடங்கியவுடன், கயல்விழி நமக்குத் தெரியாத ஒருவரை திருமணம் செய்து கொள்வதற்கு பதிலாக, தான் நன்கு பழகிய தமிழ்ச்செல்வனை திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார்.

- Advertisement -

கடைசியில், தமிழ்செல்வனும் அனைத்து ஆண்களைப் போல பிற்போக்கு சிந்தனை கொண்டவர் என்று கயல்விழிக்கு தெரிய வருகிறது. அதனால் தமிழ்ச்செல்வன் இடமிருந்து தப்பிக்க வேண்டும் என்று கயல்விழி கல்கத்தாவிற்கு பணியிடை மாற்றம் செய்து கொண்டு போக முடிவு செய்கிறார். அதனால், தான் இத்தனை நாளாக எதிர்த்த ஹிந்தி பரிட்சையை எழுத முயற்சி செய்கிறார். கடைசியில், கயல்விழி தன் வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ள ஹிந்தி பயின்றாரா? இவர் இந்தி பயில்வது கிராம மக்களுக்கு தெரிய வந்ததா? கயல்விழிக்கு திருமணம் நடந்ததா? இல்லையா ?என்பது தான் மீதிக்கதை.

கீர்த்தி சுரேஷ் மற்றும் படத்தில் நடித்த அத்தனை நடிகர்களின் நடிப்பும் பார்க்கும் படியும் ரசிக்கும் படியும் உள்ளது. ஷான் ரோல்டன் முடிந்தவரை தனது இசையின் மூலம் பல காட்சிகளை தூக்கி நிறுத்த முயற்சித்துள்ளார். ரகு தாத்தா கதை என்னவோ பலரது கவனத்தை ஈர்க்கும் வகையில் இருந்தாலும், படத்தை வெளிகொண்டு வந்த விதம் ரசிகர்களை சரியாக சென்று அடையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். படம் பார்ப்பவர்களின் பொறுமையை சோதிக்கும் அளவிற்கு மெதுவாக திரைக்கதை செல்கிறது. ஹிந்தி திணிப்பு மற்றும் கலாச்சார திணிப்பிற்கு எதிராக பேசும் இப்படம் இன்னும் நேர்த்தியாக கொண்டு போயிருந்தால் ரசிகர்களை சரியாக சென்று சேர்ந்திருக்கும்.

-விளம்பரம்-

நிறை:

கதைக்களம் ஓகே

காமெடி காட்சிகள் ரசிகர்களை நன்கு ஈர்த்துள்ளது.

சான் ரோல்டன் இசை பலம்

நடிகர்களை தேர்ந்தெடுத்த விதம் சிறப்பு

குறை:

திரைக்கதை நமது பொறுமையை சோதிக்கிறது.

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்.

படம் ஒரு டிராமா போல் இருக்கிறது.

திரைக்கதையில் இன்னும் உழைத்திருக்கலாம்.

மொத்தத்தில் ரகு தாத்தா ‘பொறுமை’ வேண்டும்

Advertisement