தீப்பெட்டி போல வீடு, சிறிய சமையல் அறை, தோட்டத்தில் கிணறு – தான் வாழ்ந்த பூர்வீக வீட்டிற்கு விசிட் அடித்த கீர்த்தி சுரேஷ்.

0
631
- Advertisement -

அம்மா, பாட்டியின் பூர்வீக கிராமத்திற்கு கீர்த்தி சுரேஷ் சென்றிருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக கீர்த்தி சுரேஷ் திகழ்ந்து வருகிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். 2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த கீதாஞ்சலி எனும் திரைப்படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். அதற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் அவர்கள் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் லீட் ரோலிலும் பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்து இருக்கிறது.

- Advertisement -

கீர்த்தி சுரேஷ் திரைப்பயணம்:

மேலும், பழம்பெரும் நடிகை சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாவித்திரி வேடத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்து இருந்தது. அதோடு இந்த படத்துக்காக கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது கூட வழங்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த சாணி காயிதம் என்ற படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார்.

கீர்த்தி சுரேஷ் நடித்த படங்கள்:

ராக்கி படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமான அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் சாணி காயிதம். இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன், லிஸ்டில் ஆண்டனி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகி இருந்தது. மேலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படங்கள்:

பின் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் சைரன் என்ற படத்தில் நடிக்கிறார். அதுமட்டுமில்லாமல் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் அம்மா, பாட்டியின் பூர்வீக கிராமத்திற்கு கீர்த்தி சுரேஷ் சென்றிருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இவருடைய தாயார் மேனகா, இவருடைய பாட்டி சரோஜா. இவர்கள் இருவருமே சினிமாவில் பிரபலமான நடிகைகளாக இருந்தவர்கள். இவர்களுடைய பூர்வீக ஊர் திருநெல்வேலிக்கு அருகில் இருக்கும் திருக்குறுங்குடி.

பூர்வீக ஊருக்கு சென்ற கீர்த்தி சுரேஷ்:

அங்கு தங்களுடைய சொந்த பூர்விக வீட்டை சுற்றிப்பார்த்து அங்கு எடுத்த புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நம்பி ராயர் கோயிலுக்கும் சென்று புகைப்படங்களை எடுத்து இருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரல் ஆனதை தொடர்ந்து பலரும் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

Advertisement