ரஜினி பட இயக்குனர் படத்தில் துருவ். மீண்டும் மகன் படத்தில் இணையப்போகும் விக்ரம் ?

0
1165
dhuruv
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் நடிகர் விக்ரம். எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் திரை உலகில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து உள்ளார். தமிழ் சினிமாவில் சிவாஜி, கமலுக்கு பின்னர் நடிப்பிற்கு ஒரு உதாரணமாக திகழ்வது விக்ரம் தான். கடந்த ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளிவந்த கடாரம் கொண்டான் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் “கோப்ரா”. நடிகர் விக்ரம் இந்த கோப்ரா படத்தில் ஒரு மிகப் பெரிய சாதனை செய்து உள்ளார். அதாவது இவர் கோப்ரா படத்தில் வித விதமான கெட்டப்புகளில் வருகிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும், 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் எஸ் எஸ் லலித் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வரப்போகிறது. இந்நிலையில் விக்ரம் நடிக்கவிருக்கும் அடுத்த படத்திற்கான தகவல்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இந்த படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விக்ரம், துருவ் இருவரும் சேர்ந்து ஆதித்ய வர்மா படத்தில் நடித்து இருக்கிறார்கள். விக்ரமின் 60 ஆவது படத்தில் துருவ்வை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், விக்ரமின் 60 வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் விக்ரம் அவர்கள் ஆர்எஸ் விமல் இயக்கத்தில் மகாவீர் கர்ணா, மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த படங்களின் படப்பிடிப்பு முடிந்த பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகப்போகும் என்று தெரியவந்துள்ளது. நடிகர் விக்ரம் அவர்கள் தன்னுடைய படங்களை இளம் இயக்குனர்கள், புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளித்து வருகிறார் என்பது குறிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement