‘எனக்கு யாருனே தெரியாதவங்க-லாம் அட்வைஸ் பண்ணாங்க’ 20 கிலோவை குறைத்த அக்காவின் உருக்கமான பதிவு . கீர்த்தி சுரேஷ்ஷின் ரியாக்ஷன்.

0
1391
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்தில் முன்னணி நாயகியாக உயர்ந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமான கீர்த்தி சுரேஷ் தற்போது ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். தனது அழகாலும், திறமையான நடிப்பாலும் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தவர். தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து உள்ளார். தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

அதிலும் கீர்த்திசுரேஷ் தெலுங்கில் நடித்த மகாநதி திரைப்படம் கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருதை வாங்கிக் கொடுத்தது அதைத்தொடர்ந்து அம்மணியின் புகழ் கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் நடிப்பதாக இருந்த படம் கைநழுவி போனது இருப்பினும் பாலிவுட்டில் இன்னொரு படத்தில் நடித்து வருகிறார். நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல நடிகை மேனகாவின் மகள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

இதையும் பாருங்க : கைதி படத்தில் நடித்துள்ள புகழ் – இது நாள் வரை இது உங்களுக்கு தெரியுமா ? இதோ அந்த காட்சி.

- Advertisement -

மேலும், இவரது அப்பா சுரேஷ் குமார் மலையாளத்தில் பிரபல இயக்குனர் தான். அதே போல கீர்த்தி சுரேஷுக்கு ரேவதி சுரேஷ் என்ற அக்காவும் இருக்கிறார். சமீபத்தில் இவர் தன்னுடைய பழைய புகைப்படத்தையும் தற்போது எடுத்தோகொண்ட புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டு இருந்தார். ரேவதியின் பழைய புகைப்படத்தில் பருமனாக இருக்கும் அவர் குண்டாக இருந்த போது தான் சந்தித்த பிரச்சனை குறித்து கேலிகள் குறித்தும் உருக்கமுடன் கூறியுள்ளார். அதில், என் வாழ்க்கை முதுவதும் நான் எடை பிரச்சனையுடன் போராடி வருகிறேன். என் அம்மா மற்றும் தங்கையுடன் ஒப்பிட்டு என்னை விமர்சித்திருக்கிறார்கள். அதனால் நான் டீனேஜராக இருந்தபோது நான் என் அம்மா, தங்கை போன்று அழகில்லை என்று நினைத்தேன்.

எனக்கு யாருனே தெரியாதவங்க-லாம் அட்வைஸ் பண்ணாங்க . . ஒரு கட்டத்துல என்ன நானே வெறுக்க ஆரமிச்சிட்டேன். என் அம்மாவும், தங்கையும் எவ்வளவு அழகாக இருக்கிறார்கள் என்று ஒரு பெண் புகழ்ந்தார்.நான் என் மீது நம்பிக்கை வைக்காதபோது என் யோகா டீச்சர் தாரா சுதர்ஷன் என்னை நம்பினார். எனக்குள் இருக்கும் பலத்தை புரிய வைத்தார்20 கிலோவுக்கும் மேல் எடையை குறைத்தது தான் என் முதல் சாதனை. இந்த சாதனையை என் குரு தாரா சுதர்ஷனுக்கு டெடிகேட் செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.தனது அக்காவின் இந்த Transforamtion-ஐ கண்ட கீர்த்தி சுரேஷ் அப்படி போடு, லவ் லவ் லவ் உன்னை நினைத்து பெருமையாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement