தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் கென் கருணாஸ். இவர் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர் கருணாஸ் மகன் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு வெளியான அழகு குட்டி செல்லம் என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார். இருந்தாலும் இவரை பிரபலமாக்கியது தனுஷ் அவர்களின் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘அசுரன்’ படத்தில் தான். இந்த படத்தில் கருணாஸின் மகன் கென் நடிப்பை பார்த்து பல பேர் பாராட்டினார்கள்.

இதை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியிருந்த விடுதலை 2 படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் கென் நடித்திருந்தார். இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து வாத்தி என்ற படத்திலும் கென் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மத்தியில் கவனத்தை ஈர்த்தார். தற்போது இவர் யூத் என்ற படத்தை இயக்கி, ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். இந்த படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.
கென் கருணாஸ் குறித்த தகவல்:
இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். அதோடு இந்த படத்தின் வெளியாக பல அறிமுக நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் சினிமாவில் அறிமுகமாக இருப்பதால் பலருக்குமே இந்த படம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. சில தினங்களுக்கு முன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படம் தொடர்பாக அளித்த பேட்டியில் கென் கருணாஸ், எனக்கு இயக்குனராக வேண்டும் என்ற ஆசை இருந்தது கிடையாது.

யூத் படம்:
நான் இயக்குனரானது இன்றைக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஆனால், முதலில் எனக்கு ஒரு நல்ல நடிகனாக வேண்டும் என்பதுதான் ஆசை. அதிலும் ஹீரோவாக நடிக்கணும் என்று ஆசை நிறைய இருந்தது. அசுரன், விடுதலை, வாத்தி படங்களில் சீரியஸான கதாபாத்திரங்களில் நடித்ததால் எனக்கு சீரியஸான கதாபாத்திரங்கள் நடிக்க மட்டுமே வாய்ப்பு வந்தது. இதே மாதிரியான படங்களில் நடித்துக் கொண்டிருக்க முடியாது. ஒரு ஜாலியான என்டர்டைன்மென்ட் மாதிரியான படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
https://www.youtube.com/watch?v=I3RRpwIzTxU
இயக்குனர் ஆக காரணம்:
எந்த இயக்குனர்களும் அந்த மாதிரியான கதைகளில் நடிக்க என்னை அழைக்கவில்லை. அதனால் நாமே படம் எடுப்போம் என்ற முடிவை தான் எடுத்தேன். அதேபோல் நிறைய பேர் அப்பா மாதிரி நான் அரசியலுக்கு வருவேனா என்று கேட்கிறார்கள். நான் அரசியலுக்கு வர மாட்டேன். எனக்கும் அதற்கும் சம்மந்தமில்லை. என்னுடைய அப்பாவின் வாழ்க்கை வேறு, என்னுடைய வாழ்க்கை வேறு என்று கூறியிருக்கிறார்.






