இமாலய நிதியுதவி.! ஒட்டுமொத்த திரைஉலகையும், கேராளவையும் திணறடித்து விஜயகாந்த்.!

0
322

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கட்டுள்ளது.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு திரைப்பட கலைஞர்களும் , பொது மக்களும் தங்களால் முடிந்த நிதியுதிவியை செய்து வரும் நிலையில் நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த மற்ற நடிகர்களை விட அதிகப்படியான நிதியுதவியை செய்துள்ளார்.

Kerala Flood

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு ரூ.1 கோடி மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்கள் தேமுதிக சார்பில் வழங்கப்படும் என்றும், கேரளாவிற்கு தேவையான நிதியை உடனடியாக ஒதுக்கிட வேண்டுமென தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளார் விஜயகாந்த்.

விஜயகாந்த் அரசியல் வந்த பின்னர் அவர் மீது பல்வேறு தரப்பினரும் அவர் குடிகாரன் என்றும், காமெடியன் என்றும் கிண்டல் செய்து வந்தனர். ஆனால், உண்மையில் தனது வெள்ளந்தியான மனதை பல முறை நிரூபித்திருக்கிறார் நடிகர் விஜயகாந்த்.

நீண்ட மாதங்களாக உடல் நல குறைவால் அவதிப்பட்டு வரும் நடிகர் விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். சமீபத்தில் கலைஞர் அவர்களின் மறைவிற்கு கண்ணீர் மல்க தனது இரங்கலை தெரிவித்த நடிகர் விஜயகாந்த், உடல் நலம் முடியாத நிலையிலும் கலைஞரின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். தற்போது அண்டை மாநில கேரள மக்களுக்கும் உதவி அறிவித்துள்ள கேப்டன் அவர்களை நம்மால் பாராட்டாமல் இருக்க முடியாது.