அப்போ விஷால் படம் இப்போ அஜித் படமா.!இது என்ன கேவலமான பப்லிசிட்டி.!

0
605
Kettavanu-Peredutha-Nallavanda

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்குபெற்ற பல்வேறு நடிகர்களுக்கு சினிமா வாய்ப்புகள் தேடி வந்த வண்ணம் இருக்கின்றது. இந்நிலையில் மஹத் மற்றும் ஐஸ்வர்யா இணைந்து தற்போது ‘கெட்டவனு பேரெடுத்த நல்லவன்டா’ என்ற படத்தில் நடித்து வருகின்றனர்.

தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் நடித்தவர் ஐவ்ஸ்வர்ய தத்தா. அதே போல தமிழில் மங்காத்தா, சென்னை 28, ஜில்லா போன்ற படங்களில் நடித்தவர் மஹத். இருவருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பினரே சினிமாவில் வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றது.

இதையும் படியுங்க : படத்தோட பர்ஸ்ட் லுக் காப்பி அடிக்கலாம்.! ஆனா அப்படியேவா எடுத்து போடுவாங்க.! 

- Advertisement -

சமீபத்தில் இவர்கள் இருவரது நடிப்பில் வெளியாக உள்ள ‘
கெட்டவனு பேரெடுத்த நல்லவன்டா ‘ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. அந்த போஸ்டர் விஷால் நடிப்பில் வெளியான ‘கதகளி’ படத்தில் வரும் பாடல் காட்சியின் காபி என்று பின்னர் தெரியவந்தது.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது போஸ்டறையும் பட குழு வெளியிட்டுள்ளது. ஆனால், அத்தனையும் வேறு படத்தின் இருந்து தான் காபி அடித்துள்ளனர். அதிலும் அஜித் நடித்த ‘வேதாளம் ‘ படத்தில் வரும் காட்சியை காபி அடித்து இந்த போஸ்ட்டரை வெளியிட்டுள்ளனர். பப்லிசிட்டிக்காக இப்படி ஒரு கேவலமான செயலை படக்குழு செய்து வருகின்றனர் என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

Advertisement