எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா ‘கே ஜி எஃப் 2’ – முழு விமர்சனம் இதோ.

0
737
Kgf
- Advertisement -

கன்னட சினிமாவின் ராகிங் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் யாஷ். இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது கே ஜி எப் திரைப்படம் தான். இந்த படம் கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை செய்தது. இதனை தொடர்ந்து தற்போது கே ஜி எஃப் 2 படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்திருக்கிறார். இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார் மற்றும் பவுன் கௌடா ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், பல எதிர்பார்ப்புகளுடன் இன்று வெளியாகியுள்ள கேஜிஎப் 2 படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

1951 ஆம் ஆண்டு இரவு நேரத்தில் சூர்யவர்த்தனால் கே ஜி எஃப் எனும் தங்க சுரங்கம் கண்டுபிடிக்கப்படுகிறது. அதே இரவில் தான் சாந்தா எனும் பெண்ணுக்கு யாஷ் என்ற மகன் பிறக்கிறான். வறுமையில் தனது தாயை இழக்கும் பொழுது பணக்காரனாக தான் சாவேன் என்று அம்மாவிடம் சத்தியம் செய்து கொடுக்கிறார் யாஷ். இந்த உலகை ஆள வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே முடிவு செய்து அதிரடியில் இறங்குகிறார். ஒரு நாள் துணிச்சலாக யாஷ் காவல்துறை அதிகாரியை அடித்து மண்டையை உடைக்கிறார். அப்போதிலிருந்தே ராக்கி என்று தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டார். வளர்ந்து மும்பையை கைக்குள் கொண்டு வர சமயத்தில் கேஜிஎப் இடத்தை ஆண்டு கொண்டிருக்கும் கருடனை கொள்ள வேண்டும் என்று அசைன்மென்ட் யாஷ் இடம் கொடுக்கப்படுகிறது.

இதையும் பாருங்க : பிணைய கைதியே நாம தான், விஜய்க்கே இந்த கதின்னா, அடுத்த பட காம்பினேஷன யோசிச்சி பாரு – ப்ளூ சட்டையின் பீஸ்ட் விமர்சனம்.

- Advertisement -

பின் அங்கு அடிமை பட்டு கிடக்கும் மக்களை பார்க்கிறார் யாஷ். ஆனால், முதலில் வந்த வேலை தான் முக்கியம் என்று கருடனைக் கொன்று கேஜிஎப்பில் கால் தடம் பதித்து இரண்டாம் கதையை துவங்குகிறார். மேலும், கருடனை கொன்ற பிறகு கே ஜி எஃப் ஐ தனக்குள் கொண்டு வருகிறார் யாஷ். அது அங்கிருக்கும் பலருக்கு பிடிக்காமல் போகிறது. கேஜிஎப் இடத்தில் இருந்து யாஷை தூக்க வேண்டும் என்று பலரும் திட்டங்களை தீட்டுகின்றனர். கருடன் இருக்கும் வரை நான் வர மாட்டேன் என்று சத்தியம் செய்து இருந்த ஆதிரா தற்போது ராக்கியை கொன்று கேஜிஎப் கைப்பற்ற வருகிறார். அதோடு பல பேர் கேஜிஎப் மீது ஆசைப்பட்டு வருகிறர்கள்.

அதேசமயம் இறந்து விட்டதாக கருதப்பட்ட சஞ்சய் தத் கேஜிஎப் கைப்பற்ற தன் படைகளுடன் வருகிறார். இறுதியில் யாஷ் கேஜிஎப் மக்களை காப்பாற்றினாரா? எதிரிகளை தும்சம் செய்தாரா? சஞ்சய் தத்தின் நிலைமை என்ன? இறுதியில் கேஜிஎப் யார் வசம் சென்றதா? என்பது தான் படத்தின் மீதி கதை. படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் யாஷ் தனி ஒருவனாக படத்தை தாங்கி சென்றிருக்கிறார். மாஸ் ஹீரோவாக எல்லோர் மனதிலும் நிற்கிறார். இவரது அலட்டல் இல்லாத நடிப்பு படத்திற்கு பக்கபலம் கொடுத்திருக்கிறது. கதாநாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீநிதி ஷெட்டி அழகான தேவதையாக வந்து ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் இவர் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். இவர்களை அடுத்து சஞ்சய் தத் தன்னுடைய மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவருடைய கெட்டப்பும், பார்வையும் அல்டிமேட் ஆக இருந்தது. அரசியல் தலைவராக வரும் ரவீனா டாண்டன் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவர்கள் மட்டும் இல்லாமல் படத்தில் ஒவ்வொரு நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்துள்ளனர். இயக்கம், திரைக்கதை என இரண்டிலுமே பிரசாந்த் நீல் மிரட்டி இருக்கிறார்.

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் 2 மடங்கு மாசாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். படத்தில் பிரகாஷ்ராஜ் கதை கூறும் விதம் அவருடைய அனுபவ நடிப்பு சிறப்பாக இருக்கிறது. விறுவிறுப்பான கதைகளும், காட்சிகளுக்கு காட்சி பிரம்மாண்டம், அழுத்தமான வசனம், ஆர்ப்பரிக்கும் சண்டைக்காட்சிகள், பிரம்மிக்க வைக்கும் ஆக்ஷன் என படத்திற்கு தேவையான அனைத்தையுமே கொடுத்து ரசிகர்களை ரசிக்கும் வகையில் உருவாக்கி இருக்கிறார் இயக்குனர். அதிலும் படத்தின் மிகப் பெரிய சண்டை காட்சிகள் அன்பறிவு மாஸ் காட்டியிருக்கிறார்.

மேலும், ரவி பஸ்ரூரின் இசை பக்கபலமாக அமைந்திருக்கிறது. புவன் கவுடாவின் ஒளிப்பதிவும் சூப்பரான உள்ளது. கர்நாடகா, மும்பை, கேஜிஎப் சுரங்கம் என படத்தில் ஒவ்வொரு இடத்தையும் அழகாக காண்பித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். நீண்ட எதிர்பார்ப்புகளுடன் இருந்த ரசிகர்களுக்கு கே ஜி எஃப் 2 படம் ஒரு சிறந்த விருந்து வைத்திருக்கிறது என்று சொல்லலாம்.

நிறைகள் ;

முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகமும் மாசான மிரட்டலை காட்டி இருக்கிறார் இயக்குனர்.

வழக்கம் போல் தன்னுடைய மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் யாஷ்.

படத்தில் பிற நடிகர்கள் தங்களுடைய வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

பின்னணி இசையும், ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலமாக உள்ளது.

கதை, திரைக்கதை, இயக்கம் என இயக்குனர் கொண்டு சென்ற விதம் அருமையாக உள்ளது.

படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் கிளாப்ஸ் கொடுத்திருக்கிறது. ஒரு இடத்தில் கூட சலிப்பு தட்டவில்லை என்றே சொல்லலாம்.

குறைகள் :

ஒருசில இடத்தில் லாஜிக் குறைபாடுகள் இருந்ததே தவிர மற்றபடி சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படத்தில் எந்த ஒரு குறையும் இல்லை.

ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு ரசிகர்களுக்கு ஒரு பக்கா என்டர்டைன்மென்ட் பேக்காக கேஜிஎப் 2 படம் உள்ளது என்று சொல்லலாம்.

மொத்தத்தில் கேஜிஎப் படம்- மிரட்டலான மாஸ்.

Advertisement