Kgf படத்தின் முக்கிய நடிகர் திடீர் மரணம், சோகத்தில் கன்னட திரையுலகம் – இதான் காரணமாம்.

0
445
kgf
- Advertisement -

கே ஜி எஃப் பட நடிகர் உடல்நலக்குறைவால் இறந்துள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் யாஷ். இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது கே ஜி எப் திரைப்படம் தான். இந்த படம் தான் கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் சாதனையை செய்து இருந்தது. இதனை தொடர்ந்து சமீபத்தில் தான் கே ஜி எஃப் 2 படம் வெளியாகி இருந்தது. இந்தப் படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்திருக்கிறார். இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-
கே ஜி எப் 2 வில் இணைந்த வடசென்னை பிரபலம்.! செம சூப்பர் லக் தான்.! - Tamil Behind  Talkies

மேலும், பல எதிர்பார்ப்புகளுடன் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகி இருந்த கேஜிஎப் 2 படம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. படத்தில் கருடனை கொன்று கேஜிஎப்பில் கால் தடம் பதித்து இரண்டாம் கதையை தொடங்குகிறார் யாஷ் . ஆனால், அது அங்கிருக்கும் பலருக்கு பிடிக்காமல் போகிறது. பின் கேஜிஎப் இடத்தில் இருந்து யாஷை தூக்க வேண்டும் என்று எதிரிகள் பலரும் திட்டங்களை தீட்டுகின்றனர். இறுதியில் யாஷ் கேஜிஎப் மக்களை காப்பாற்றினாரா? எதிரிகளை துவம்சம் செய்தாரா? மக்களின் நிலைமை என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை.

- Advertisement -

கேஜிஎப் 2 படம் பற்றிய தகவல்:

இயக்கம், திரைக்கதை என இரண்டிலுமே பிரசாந்த் நீல் மிரட்டி இருக்கிறார். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் 2 மடங்கு மாசாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். இதுவரை கே ஜி எஃப் 2 படம் 900 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகர் மோகன் ஜுனேஜா மருத்துவமனையில் உயிரிழந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கே ஜி எஃப் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் நடித்து இருந்தவர் நடிகர் மோகன் ஜுனேஜா.

கேஜிஎப்பில் மோகன் ஜுனேஜா:

அதிலும் கேங்க கூட்டிட்டு வர்ரவன் கேங்ஸ்டர், ஒத்தைய வர்ரவன் மான்ஸ்டர் என்ற ஒத்த டயலாக் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் மோகன் ஜுனேஜா. இவர் கன்னட திரையுலகில் மிக பிரபலமான நடிகராக இருந்தவர். பெரும்பாலும் இவர் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் தான் நடித்திருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் மோகன் ஜுனேஜா அவர்கள் பல ஆண்டுகளாகவே சினிமா துறையில் பயணித்திருக்கிறார்.

-விளம்பரம்-

மோகன் ஜுனேஜா திரைப்பயணம்:

செல்லடா என்ற கன்னட படத்தில் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். இதுவரை இவர் 100க்கும் மேற்பட்ட பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் பல சீரியல்களிலும் நடித்து இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் கன்னட நடிகர் மோகன் ஜுனேஜா காலமாகி உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நீண்ட நாட்களாகவே இவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருந்தார்.

மோகன் ஜுனேஜா மரணம்:

இருந்தும் சிகிச்சை பலனளிக்காமல் இன்று மோகன் ஜுனேஜா காலமாகியுள்ளார். தற்போது இவருக்கு 54 வயது தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய இறப்பு ரசிகர்கள் மற்றும் கன்னட திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் மோகனுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல் பல பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை நேரிலும் சோசியல் மீடியாவிலும் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement