அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் விஸ்வாசம் மற்றும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட ஆகிய இரண்டு படங்களும் கடந்த 10 ஆம் தேதி வெளியாகி வெற்றி நடைபோட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் கன்னட நடிகர் யாஷ் நடித்த ”
இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் ‘விஜய் 63’ படத்தில் நடித்து வருகிறார். ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிறக்குகிறார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் துவங்க உள்ளது.
இதையும் படியுங்க : கன்னட சினிமாவிற்கு கிடைத்த மாபெரும் பெருமை KGF..!வசூல் எவ்வளவு தெரியுமா..!
இந்நிலையில் நடிகர் விஜய் யாஷ் நடிப்பில் வெளிவந்த ‘கே ஜி எப் ‘ திரைப்படத்தை பார்த்துள்ளார். கன்னட மொழிப்படமான இது கடந்த டிசம்பர் மாதம் 21-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளிலும் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்த படத்தை பார்க்க விஜய் ஆசைபட்டுள்ளார். இதற்காக அவருக்கு சென்னையில் பிரேத்யேகே காட்சி ஒன்று ஏற்பாடு செய்யபட்டுள்ளது. இந்த படத்தை பார்த்த விஜய், இந்த விதம் பிரம்மாண்டமாகவும், நடிகர்களின் நடிப்பு மிகவும் நேர்த்தியாக அமைந்துள்ளதாக பாராட்டினார்.மேலும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.