தளபதி 65 படத்துக்கு அப்புறம் KGF படத்த மறந்துடுவீங்க – காரணம் இந்த இரட்டையர்கள் தான். யார் இவர்கள் ?

0
5925
anbarivu
- Advertisement -

மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் இயக்கத்தில் தனது 65 படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். தளபதி 65 படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் என்பது முதலிலேயே உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் நாயகி பற்றிய அப்டேட் வெளியானது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக முகமூடி பட நடிகை பூஜா ஹேக்டே கமிட் ஆகி இருக்கிறார். இதை தவிர இந்த படத்தில் பணிபுரியம் மற்ற கலைஞர்கள் பற்றிய தகவல் வெளியாகவில்லை.

-விளம்பரம்-

இந்த படத்தின் பூஜை நேற்று (மார்ச் 31) சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் நாயகி பூஜா ஹேக்டே கலந்துகொள்ளவில்லை. நேற்று முதலே இந்த படத்தின் பூஜை புகைப்படங்களும் வீடியோகளும் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், படக்குழுவில் பணிபுரியும் பிரபலங்கள் யார் யார் என்று ரசிகர்கள் ஆராய துவங்கிவிட்டனர்.

இதையும் பாருங்க : ‘தளபதி 65’ பூஜையில் கவின் இருக்கும் காரணம் என்ன தெரியுமா ? – உண்மை இது தான்.

- Advertisement -

அந்த வகையில் இந்த படத்தின் பூஜையில் இரண்டு இரட்டையர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் யார் என்று சிலர் அறிந்திருப்பார்கள். ஆனால், பலருக்கு இந்த இரண்ட்டையர்கள் யார் என்பது தெரிய வாய்ப்பில்லை. இவர்கள் வேறு யாரும் இல்லை தென்னிந்திய சினிமாவில் பிரபலமான ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பு மற்றும் அறிவு என்பவர்கள் தான். தேசிய விருது பெற்ற இந்த இரட்டையர்கள் தான் ஆக்ஷனில் தெறிக்கவிட்ட KGF மற்றும் KGf 2 படங்களில் ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணியாற்றியவர்கள். ‘

மேலும், தமிழில் மெட்ராஸ், கபாலி, கைதி போன்ற படங்களில் பணியாற்றியுள்ளனர். தளபதி 65 படத்திற்குப் பிறகு கே.ஜி.எப் படத்தின் சண்டைக் காட்சியை ரசிகர்கள் மறந்து விடுவார்கள் என்றும் அந்தளவுக்கு விஜய்யின் தளபதி 65 படம் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்ததாக இருக்கும் என்றும், அன்பறிவ் குழுவில் இடம்பெற்றுள்ள திலீப் குமார் என்பவர் பேசிய வீடியோ ஒன்று கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் வைரலானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement