தமிழ் சினிமா உலகின் இசைப்புயலாக கருதப்படுபவர் ஏ ஆர் ரகுமான். இவருடைய இசையில் வெளிவந்த பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு இருக்கிறது. மேலும், ஏ ஆர் ரகுமானின் மூத்த மகள் கதீஜா. தற்போது இவர் சினிமா உலகில் அறிமுகமாகி இருக்கிறார். இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் மின்மினி.
இவர் இதற்கு முன்பே பூவரசம் பீப்பி, சில்லு கருப்பட்டி, ஏலே, லோனர்ஸ் போன்ற படங்களை எல்லாம் இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மின்மினி படத்தில் எஸ்தர் அனில், பிரவீன் கிஷோர், சி கௌரவ் காளை உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். எட்டு வருட காத்திருப்பு பிறகு இந்த படம் தற்போது வெளியாகி இருக்கிறது. இதற்கு காரணம், திரையில் நடிகர்கள் உடைய உண்மையான வயதையும், பருவத்தையும் காட்டுவதற்காகத்தான் காத்திருந்ததாக கூறப்படுகிறது.
மின்மினி படம் :
மேலும், இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாக இருக்கிறார் ஏ ஆர் ரகுமானின் மூத்த மகள் கதீஜா. இதனாலே படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த படம் ஆகஸ்ட் 9-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி இருந்தது. மின்மினி படத்தில் வந்த பாடல்களும் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. இந்த நிலையில் கதீஜா சமீபத்தில் அளித்த பேட்டியில், சின்ன வயதிலிருந்து பலருமே என்னிடம் வந்து பேசுவார்கள்.
ஏ.ஆர்.ரகுமான் பேட்டி:
நான் அவர்கள் டைப்பாக இருக்க மாட்டேன். காரணம், நான் ரகுமான் மகன் என்பதற்காக பழகுவார்கள். அது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும். ஆனால், இப்போது நான் இசையமைத்த படம் வெளிவந்த போது முதல் நாள் முதல் காட்சி பார்க்க ரோகினி திரையரங்கிற்கு போனேன். அங்கு என்னிடம் வந்து பேசியவர்கள் எல்லாம் என்னை ரகுமான் மகள் என்று பார்க்காமல் கதீஜாவாக தான் பார்த்தார்கள். இது எனக்கு ரொம்ப சந்தோஷத்தை கொடுத்தது என்று கூறியிருக்கிறார்.
ஏ.ஆர்.ரகுமான் திரைப்பயணம்:
இவர் தனது 15 வயதிலேயே பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு பல இசைக் கச்சேரிகளில் கலந்துகொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்தாராம். பின்பு பல விளம்பர படங்களுக்கு இசையமைத்து வந்த ஏ.ஆர்.ரஹ்மான் முதல் முதலாக இசையமைத்தது மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘யோதா’ என்ற திரைப்படம் தான். ஆனால், ‘யோதா’ படம் வெளியாவதற்கு முன்பு தமிழில் ‘ரோஜா’ படம் வெளியானதால் அதுவே ரஹ்மானின் முதல் படமாக மாறியது.
ஏ.ஆர்.ரகுமான் குறித்த தகவல்:
இவர் இசை அமைத்த முதல் படத்திலேயே அனைத்து பாடல்களும் பட்டித்தொட்டி எங்கும் ஹிட் ஆனதை தொடர்ந்து கோலிவுட்டில் இளையராஜாவுக்கு இணையாக ரஹ்மானும் கொண்டாடப்பட்டார். அதனைத் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான் தேசிய விருது, ஃபிலிம் ஃபேர், ஆஸ்கர் விருது, கிராமிய விருதுகளையும் சர்வதேச அளவில் மற்றும் தனக்கான அங்கீகாரத்தை பல இடங்களில் தடம் பதித்துள்ளார். சமீபத்தில் நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ படத்தில் ரஹ்மானின் பாடல்கள் வெளியாகியிருந்தது. இதை அடுத்து இவர் கமலஹாசன் நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைப் என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார்.