அறுவை சிகிச்சை முடிந்த அடுத்த நாளே குஷ்பூ செய்த விஷயத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்- வைரலாகும் புகைப்படம்

0
612
- Advertisement -

அறுவை சிகிச்சை முடிந்த அடுத்த நாளே குஷ்பூ செய்திருக்கும் செயலை பார்த்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியாகி உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பு. இவர் நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். பின் 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

-விளம்பரம்-
Actress Kushboo Re-entry As Heroine After 18 Years

அதனைத் தொடர்ந்து இவர் தமிழ் சினிமா உலகில் பல படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து இருந்தார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். பின்னர் குஷ்பூ அவர்கள் திரைப்பட இயக்குனர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது குஷ்பூ அவர்கள் குணச்சித்திர வேடங்களில் படங்களில் நடித்து வருகிறார். அதோடு இவர் சினிமாவில் படங்களில் இல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினி ஆகவும், நடுவராகவும், நடிகையாகவும் பணியாற்றி வருகிறார்.

- Advertisement -

அண்ணாத்த படத்தில் குஷ்பூ:

மேலும், இவர் “அவ்னி சினிமாக்ஸ்” என்ற படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். சமீபத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்தில் குஷ்பூ நடித்திருக்கிறார். இந்த படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, சூரி என்று பலர் நடித்திருக்கிறார்கள். இதில் ரஜினியின் முறைப்பெண்ணாக குஷ்பூ நடித்து உள்ளார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும் வசூலில் வாரி குவித்து இருக்கிறது.

Netizen Trolled Kushboo Recent Transformation Is A Photo Edit

குஷ்பூ நடிக்கும் சீரியல்:

இதனை தொடர்ந்து குஷ்பூ பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார். தற்போது குஷ்பு மீண்டும் சின்னத்திரை சீரியலில் நடித்து வருகிறார். இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் மீரா என்ற சீரியலை இவரே இயக்கி நடித்து வருகிறார். இந்த தொடர் பெண்கள் சுதந்திரம், பெண்கள் உரிமை ஆகியவை மையமாகக் கொண்டதாக இருக்கிறது. இந்த சீரியல் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, சமீப காலமாகவே குஷ்பு அரசியலில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்.

-விளம்பரம்-

குஷ்பூவுக்கு அறுவை சிகிச்சை:

குஷ்பு எப்போதும் சமூகம் சமூகம் சார்ந்த பல விஷயங்களுக்கு குரல் கொடுத்திருக்கிறார். இப்படி குஷ்பு அவர்கள் அரசியல், நடிப்பு என்று பிசியாக இருக்கிறார். இந்நிலையில் குஷ்பு அறுவை சிகிச்சை செய்து இருக்கும் தகவல் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், சமீபத்தில் குஷ்புவுக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்து இருக்கிறது. இது தொடர்பாக குஷ்பு அவர்கள் மருத்துவமனை பெட்டில் இருக்கும் புகைப்படம் ஒன்றும் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது.

அறுவை சிகிச்சைக்கு பின் குஷ்பூ செய்தது:

இதை பார்த்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியாகி என்ன ஆச்சு? நீங்க கூடிய விரைவில் குணமடைந்து வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம் என்று எல்லாம் கமெண்ட் போட்டு இருந்தார்கள். இந்த நிலையில் அறுவை சிகிச்சை முடிந்த அடுத்த நாளே குஷ்பூ மைசூர் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றிருக்கிறார். அதன் புகைப்படங்களும் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்து இருக்கிறது.

Advertisement