பிரச்சனை தாங்கள. குடும்பத்துடன் இருக்க முடியல. குஷ்பு எடுத்த அதிரடி முடிவு.

0
234672
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் 80,90 காலகட்டங்களில் உள்ள முன்னணி நடிகைகளில் மிகவும் பிரபலமானவர் நடிகை குஷ்பு . மேலும்,இவர் முதலில் குழந்தை நட்சத்திரமாக தான் தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார். நடிகை குஷ்பு அவர்கள் 1989 ஆம் ஆண்டு ‘வருஷம்16’ என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்குப் பிறகு தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம்,ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றவர். நடிகை குஷ்பு அவர்கள் சின்னத்தம்பி, அண்ணாமலை, மன்னன், சிங்காரவேலன், ரிக்ஷா மாமா, நாட்டாமை, முறைமாமன்,மகளிர்க்காக உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர் திரைப்பட நடிகை மட்டுமல்ல அரசியல்வாதியும் ஆவார். மேலும்,அரசியலிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும், இவருடைய அழகிற்கும்,நடிப்பிற்கும் என ரசிகர்கள் கூட்டம் இன்று வரை குறையவே இல்லை என்று சொல்லலாம்.

-விளம்பரம்-
Khusboo

அதுமட்டும் இல்லாமல் இவருக்கு உருவ சிலையை வைத்து கூட கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள். நடிகை குஷ்பு அவர்கள் அந்த அளவிற்கு மக்களிடையே பிரபலமான நடிகை இவர். சினிமா துறையில் பல முன்னணி நடிகர்கள் ரஜினி, கமல், சத்யராஜ்,பிரபு உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து நடிகை குஷ்பு அவர்கள் சினிமா திரை உலகில் மிக பிரபலமான இயக்குனர் சுந்தர்.சி அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா,ஆனந்திதா என்ற இரண்டு பெண்கள் உள்ளார்கள். இப்படி இவர் இளமை ததும்பும் முகபாவம் உடையவராகவே விளங்கி வருகிறார். மேலும்,எண்பதுகளில் தொடங்கி இன்று வரை இவருடைய அழகிற்கு என ரசிகர்கள் படை கூடிக் கொண்டே தான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை.

இதையும் பாருங்க : ஜீ தமிழின் பிரபல சீரியலை கழுவி ஊற்றிய சின்மயி. காரணம் என்ன தெரியுமா ?

- Advertisement -

அதுமட்டும் இல்லாமல் இவர் வெள்ளித்திரை, சின்னத்திரை என அனைத்து துறைகளிலும் ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கிறார். இவருடைய எல்லா படங்களும் சூப்பர் டூப்பர் படம் கூட சொல்லலாம். இவர் சினிமா துறையில் வாய்ப்பு குறைந்த உடன் சின்ன திரையை நோக்கி பயணம் செய்தார். மேலும்,நடிகை குஷ்பு சின்னத்திரை தொடர்களிலும், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலும் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினார். அதோடு குஷ்பு அவர்கள் தன் கணவர் சுந்தர் சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை எல்லாம் ‘அவ்னி சினிமாக்ஸ்’ என்ற பட தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாகவே இவருடைய முந்தைய கால புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

மேலும்,ஆன்லைன்லில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். ஆனால், திடீரென்று இவர் தற்போது அவருடைய ட்விட்டர் பக்கத்தை நீக்கியுள்ளார். காரணம் என்னவென்று கேட்டால் அதில் நிறைய நெகட்டிவ் கருத்துக்களும், புகைப்படங்களும் வருவதால் நீக்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவிடுவதை விட குடும்பத்துடன் செலவிட்டால் நன்றாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் நான் என்னுடைய நேரத்தை முழுவதும் குடும்பத்துடன் இருக்க முடிவு செய்துள்ளேன் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் ட்விட்டரில் குஷ்புவை பாலோ செய்யும் ரசிகர்களுக்கு இது ஒரு பெரும் அதிர்ச்சியாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

Advertisement