நீ அவளுக்கு பிறந்தவன் தானே. தன்னிடம் ஆபாசமாக பேசிய நபருக்கு குஷ்பூ கொடுத்த செருப்படி பதில்.

0
1271
- Advertisement -

சினிமா பிரபலங்களை பொருத்தவரை ரசிகர்களின் விமர்சனங்களுக்கு மிகவும் எளிதாக பலியாகி விடுகின்றனர். அதிலும் நடிகைகள் என்றால் சொல்லவே தேவையில்லை. அந்த வகையில் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி ஏதாவது ஆபாச கமெண்டுகளை எதிர்கொண்டு வருகிறார் பிரபல நடிகையான குஷ்பு.குஷ்புவிற்கு அறிமுகம் தேவையில்லை ரஜினி கமல் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த குஷ்பு தனது இரண்டாவது இன்னிங்சில் அம்மா அத்தை போன்ற கதாபாத்திரத்தில் கலக்கி வருகிறார்.அதுமட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் இவர் ஜொலித்து வருகிறார்.

-விளம்பரம்-

சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் குஷ்பூ அடிக்கடி சமூக பிரச்சனைகள் குறித்து பேசுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு கரோனா வைரஸ் பரவல் குறித்து பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் பேசிய குஷ்புகொரோனா பரவலுக்கு மக்கள் தான் முக்கிய காரணமாக இருந்து வருகிறார்கள். அரசாங்கம் அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் என்று சொல்லியும்,கரோனா வைரஸ் குறித்து எந்தவித கவலையும் இல்லாமல் வெளியில் சுற்றி வருகிறார்கள்.

- Advertisement -

சமீபத்தில் மதுபான கடையில் குவிந்த கூட்டத்தை கூட நாம் அனைவருமே கண்டோம். சமூக இடைவெளியை மக்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்ல. பிரச்சனை இங்கே மக்களிடமும் இருக்கிறது. மேலும் மத்திய மற்றும் மாநில அரசு அதிக பொறுப்புடன் இருக்கவேண்டும் என்றும் கூறியிருந்தார். குஷ்பு இந்த நிலையில் தான் அளித்த பேட்டியின் லிங்கை நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்த பதிவிற்கு ட்விட்டர் வாசிகள் சிலர் ஆபாசமான கமெண்டுகளை பதிவிட்டார்கள். அதில் ஒரு நபர் தாய்க்கிழவி என்ன சொல்லுது? என்று கமென்ட் அடித்தார்.இதற்கு பதில் அளித்த குஷ்பு கண்ணில்லாத கபோதி.பாவம், பிறந்ததிலிருந்தேவா இல்ல பாதிலையா ?இல்ல கிழவனுக்கு வயசுக்கோளாறு ? என்று பதிலடி கொடுத்தார்.மேலும் ஒரு ரசிகர் குஷ்புவை ஆபாசமான வார்த்தை பயன்படுத்தி திட்ட, அவருக்கு பதில் அளித்த குஷ்பு உன் ஆத்தா பேரு நல்லா இருக்கு ?நீ அவளுக்கு பிறந்தவன் தானே என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement