‘புலி படத்தோடு என்ன வீட்டுக்கு அனுப்பிடீங்க’ – தமிழில் தொடர்ந்து நடிக்காததற்கு காரணத்தை கூறிய சுதீப். இதோ வீடியோ.

0
607
Sudeep
- Advertisement -

தமிழ் படங்களில் நடிக்காததற்கான காரணத்தை பேட்டியில் ஒன்றில் நடிகர் சுதீப் கூறியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கன்னட சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சுதீப். ராஜமௌலி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியான ‘நான் ஈ’ படத்தின் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் கன்னட நடிகர் சுதீப். தமிழில் இவர் பரிட்சயமான நடிகர் இல்லை என்றாலும் கன்னட திரை துறையில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

-விளம்பரம்-

நான் ஈ படத்தை தொடர்ந்து இவர் தமிழில் விஜய் நடித்த ‘புலி’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அதன் பின்னர் பாகுபலி, முடிஞ்சா இவன புடி போன்ற சில படங்களில் நடித்து இருந்தார். அதற்கு பின் இவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. மேலும், கன்னடத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியையும் இவர் தான் தொகுத்து வழங்கி இருந்தார். கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான ‘சயீரா நரசிம்ம ரெட்டி’ என்னும் வரலாற்றுப் படத்தில் சுதீப் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

- Advertisement -

இதையும் பாருங்க : பருத்தி வீரன் படத்திற்கு பின் பல ஆண்டுகள் படம் இயக்காமல் இருந்த காரணம் இது தான் – அமீர் சொன்ன விஷயம்.

விக்ராந்த் ரோணா படம்:

இதை தொடர்ந்து இவர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது விக்ராந்த் ரோணா என்ற படத்தில் கிச்சா சுதீப் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் கிச்சா சுதீப் உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டிருந்தனர். விழாவில் செய்தியாளர்களிடம் கிச்சா சுதீப் படம் குறித்து கூறி இருந்தது, தமிழ்நாட்டில் நான் எப்போது வந்தாலும் எனக்கு நிறைய மரியாதை கொடுத்து என்னுடைய வேலையை பார்த்து ரசிக்கிறார்கள்.

-விளம்பரம்-

சுதீப் அளித்த பேட்டி:

அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எல்லா மொழிப் படங்களும் எல்லா இடங்களிலும் வெளியாக வேண்டும். சினிமா என்பது ஒரு கதை. அதை எல்லோருக்கும் சொல்ல வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து. நிச்சயமாக இந்த படம் நல்ல படமாக இருக்கும். காசு இருக்கு என்பதற்காக பெரிய படம் பண்ணலாம் என்று இதை எடுக்கவில்லை. இதன் கதை எனக்கு பிடித்திருந்தது. இதை எல்லோரும் பார்க்க வேண்டும் என்று தான் எடுத்துள்ளோம். தற்போது வரை இயக்குனர் இந்த படத்திற்காக வேலை செய்து வருகிறார்.

படம் குறித்து சுதீப் சொன்னது:

3 டி வேலை செய்வதால் அவரால் இங்கு வரமுடியவில்லை. படத்தின் வருமானத்தைப் பொறுத்து வெற்றி அமையாது. மேலும், மைடியர் குட்டி சாத்தான் கொடுத்த படத்தை வேறு எந்த படமும் கொடுக்க முடியாது. அதை எங்களால் மாற்ற முடியாது. குழந்தைகளுக்காக என்ன வேண்டுமோ அது இந்த படத்தில் உள்ளது. படங்களில் அதிக அளவில் வைலன்ஸ் இருப்பதை எங்கள் படத்தில் நாங்கள் குறைத்துக் கொள்வோம். மற்ற நடிகர்கள் படங்கள் பற்றி நான் சொல்ல முடியாது.

தமிழ் படத்தில் நடிக்காத காரணம்:

ராஜமௌலி மட்டுமல்ல அனைத்து நல்ல இயக்குனர்கள் உடன் பணியாற்றிய எனக்கு ஆசை. பலரும் தமிழ் படத்தில் நீங்கள் ஏன் நடிக்கவில்லை? என்று கேட்கிறார்கள். நான் ஈ படத்திற்கு பிறகு ஹீரோவா இல்லை வில்லனா என்று தெரியவில்லை. உங்களை வைத்து என்ன செய்வது என்று தெரியவில்லை என பலரும் தெரிவித்தனர். அதனால் தான் தமிழ் படங்கள் எதுவும் வரவில்லை. அதுமட்டுமில்லாமல் புலி படத்தை பார்த்துவிட்டு நீங்கள் தானே என்னை வீட்டிற்கு அனுப்பினீர்கள் என்று நகைச்சுவையாக பேசினார்.

Advertisement