‘போலீஸுக்கெல்லாம் போகாத’ன்னு அழுதவர், ‘நாம லிவ் இன் ரிலேஷன்ஷிப்ல இருக்கலாம்’னு சொன்னார்-விக்ரமன் விளக்கத்துக்கு கிருபா பதில்

0
1853
- Advertisement -

விக்ரமன் அளித்த விளக்கத்தை தொடர்ந்து கிருபா முனுசாமி அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் விக்ரமன். இவர் விசிக மாநில செய்தி தொடர்பாளர். தற்போது சோசியல் மீடியாவில் இவருடைய விவகாரம் தான் ஹாட் டாபிக்காக சென்று கொண்டு இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் தான் விக்ரமன் மீது கிருபா என்பவர் புகார் கொடுத்து இருந்தார். உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருபவர் கிருபா முனுசாமி. இவரை விக்ரமன் காதலித்து ஏமாற்றியதாகவும், இவரிடம் விக்ரமன் காசு வாங்கி ஏமாற்றியதாகவும், விக்ரமன் ஐ லவ் யூ என்று சொன்ன ஸ்கிரீன்ஷாட்டையும் வெளியிட்டு சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

-விளம்பரம்-

இதை அடுத்து தன் மீது இருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக விக்ரமன் பதிவு ஒன்று போட்டு இருந்தார். அதில் அவர், என் மீது கிருபா முனுசாமி என்பவர் கூறிய அத்தனை குற்றச்சாட்டுகளை நான் மறுக்கிறேன். இதில் பாதிக்கப்பட்டவன் என்றால் அது நான் மட்டும்தான். என் மீது பழி சுமத்த வேண்டும் என்ற நோக்கில் இப்படி எல்லாம் செய்கிறார். அப்போது அவரிடம் எனது தேவைகளுக்காக பணம் வாங்கியது உண்மைதான். ஆனால், அவருக்கு வாக்கு கொடுத்ததை போலவே பணத்தையும் திருப்பி தந்துவிட்டேன். அதற்கான ஸ்கிரீன்ஷாட்டையும் இதோ இணைத்து இருக்கிறேன் என்று கிருபா எழுதிய காதல் கடிதத்தையும் இணைத்து இருந்தார்.

- Advertisement -

விக்ரமன் அளித்த பேட்டி:

மேலும் இது தொடர்பாக சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்தது. பின் இது குறித்து விக்ரமன் அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் அவர் கிருபா செய்த மோசடி வேலைகளை கூறி இருக்கிறார். அதோடு கிருபா மீது சட்டரீதியாக புகார் அளிப்பதாகவும் விக்ரமன் கூறி இருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக கிருபா முனுசாமி அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர், இன்று பொதுவெளியில் விக்ரமன் வாய்க்கு வந்தபடி என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், நடந்த உண்மையை யாராலும் மறைக்க முடியாது.

கிருபா அளித்த பேட்டி:

பத்தாண்டுகளுக்கு முன்னாடி என்னுடன் அவர் நட்பாக தான் பழகினார். ஆனால், ஒரு கட்டத்தில் எங்களுடைய நட்பு காதலாக மாறியது. அவர் கல்யாணம் செய்கிற எண்ணத்தில் என்னுடன் பழகவில்லை என்று சொல்கிறார். அவரும் நானும் பேசிய சில வாட்ஸ் அப் சேட் வெளியிட்டு இருக்கிறேன். அதை பார்த்தாலே என்னுடன் அவர் எப்படி பழகினார் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும். நான் லண்டனில் இருந்தபோது என்னை பார்ப்பதற்கே அவர் விசா அப்பளை பண்ணார். ஆனால், அது கிடைக்காமல் போனது. அதோடு நான் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உறுப்பினராக இல்லையே தவிர மற்றபடி பல வருஷமாக அந்த கட்சியின் அபிமானியாக இருக்கிறேன்.

-விளம்பரம்-

விக்ரமன் குறித்து சொன்னது:

மேலும், என்னுடன் அவர் பழகியது ஒரு உள்நோக்கத்துக்காக தான் என்பது எனக்கு தாமதமாக தான் தெரிந்தது. தேவைப்படும்போதும், கடன் வாங்கும் போது மானே , தேனே ஐ லவ் யூ என்று சொல்லிவிட்டு இப்போது இல்லை என்று பொய் சொல்கிறார். என்னுடைய பணம், நேரத்தை எல்லாம் ஏமாற்றி என் மனதை காயப்படுத்தினார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் இவருக்கு பிரபலமே கிடைத்தது. அதோடு இப்பதான் அவருக்கு கட்சியிலும் ஒரு நல்ல பொறுப்பு கிடைத்திருக்கிறது. அதனால் என்னை அவர் அவாய்ட் பண்ணுகிறார். அதற்கு பிறகு தான் நானுமே அவரைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தேன்.

விக்ரமன் செய்த நாடகம்:

இவர் ஏற்கனவே சில பெண்களை இதே மாதிரி ஏமாற்றி இருக்கிறார் என்று தெரிந்தது. அதனால் அவரை கல்யாணம் செய்து கொள்ளும் எண்ணத்தையே நான் விட்டு விட்டேன். இவர் இனிமேல் எந்த பெண்களையும் ஏமாற்றக்கூடாது என்ற நோக்கில் தான் போலீசில் புகார் தரலாம் என்று முடிவு செய்தேன். அதை தெரிந்து கொண்டு தான் மூன்று மாதத்திற்கு முன்னாடி அவர் என்னை சந்தித்து போலீஸுக்கெல்லாம் போகாதே என்று அழுதார். அது மட்டும் இல்லாமல் ரிலேஷன்ஷிப்பில் இருக்கலாம் என்றெல்லாம் சொன்னார். ஆனால், நான் அதையும் மறுத்து விட்டேன். ஒரு கட்டத்தில் என்னை மிரட்டவும் செய்தார். கெட்ட வார்த்தைகளால் திட்டினார். பின் நான் கட்சி சார்பில் உதவி கேட்டேன். ஆனால், ஒரு பயனும் இல்லை. திருமாவளவனையே நேரில் சந்தித்து கேட்டும் பிரயோஜனம் இல்லாமல் போனதனால் தான் நான் ட்விட்டரில் இது குறித்து பேச வேண்டிய நிலைமைக்கு வந்தேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement