ஹீரோவாக அறிமுகமாகி பின் காமெடியனாக போன சுதாகர் இறந்துவிட்டாரா ? – அவரே வெளியிட்ட வீடியோ.

0
1798
Sudhakar
- Advertisement -

நடிகர் சுதாகர் குறித்து பரவிய வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்து அவரே வெளியிட்டிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் எண்பது காலகட்டத்தில் மிகப் பிரபலமான நடிகராக இருந்தவர் சுதாகர். இவர் 1978 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்திருந்த கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் தான் ஹீரோவாக அறிமுகம் ஆகியிருந்தார். முதல் படத்திலேயே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் மாறாத பூக்கள், சுவர் இல்லாத சித்திரங்கள், மாந்தோப்பு கிளியே, எங்க ஊரு ராசாத்தி, பொண்ணு ஊருக்கு புதுசு, அதிசய பிறவி, கரும்பு வில், கரை கடந்த ஒருத்தி, தைப்பொங்கல் போன்ற பல படங்களில் நடித்திருந்தார். மேலும், இவர் தமிழ் படத்தில் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

சுதாகர் திரைப்பயணம்:

சொல்ல போனால், 80 காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகராக சுதாகர் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இதுவரை இவர் தமிழ் , தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் சுமார் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவருடைய நடிப்பில் தமிழில் எந்த படமும் வெளிவரவில்லை. ஆனால், இவர் தெலுங்கில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் படங்களில் நடித்து வருகிறார்.

சுதாகர் மரணம்:

இதனால் இவர் ஹைதராபாத்தில் செட்டில் ஆகிவிட்டார். தற்போது இவருக்கு 64 வயதாகிறது. இதனால் சில வாரங்களாகவே சுதாகர் உடல்நிலை குறித்து பல செய்திகள் இணையத்தில் பரவி கொண்டு இருந்தது. இந்த நிலையில் நடிகர் சுதாகர் இறந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியிருந்தது. இதற்கு பலருமே அவருடைய மறைவிற்கு இரங்கலை தெரிவித்து இருந்தார்கள். ஆனால், உண்மையில் நடிகர் சுதாகர் இறக்கவில்லை.

-விளம்பரம்-

சுதாகர் வெளியிட்ட வீடியோ:

மேலும், இது தொடர்பாக விளக்கம் கொடுத்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், நீங்கள் என்னை பற்றி படிக்கும் அனைத்து தகவல்களும் பொய்யானவை. தயவு செய்து அந்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். நான் மிகவும் மகிழ்ச்சியாக சந்தோஷமாக இருக்கிறேன். நான் நன்றாகவும் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் நடிகர் சுதாகர் குறித்து வெளியான வதந்தி தகவல் பொய் என்று உறுதியாக இருக்கிறது.

Advertisement