“டபுள் மீனிங்” திமுக பிரமுகரின் சர்ச்சை பேச்சு – குஷ்பூவிடம் மன்னிப்பு கேட்ட கனிமொழி. என்ன நடந்தது.

0
517
Kushboo
- Advertisement -

நடிகை குஷ்புவிடம் திமுக பிரமுகர் கனிமொழி மன்னிப்பு கேட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை குஷ்பு. அந்த காலத்திலேயே இவருக்கு ரசிகர்கள் சிலை வைத்து இருந்தார்கள். மேலும், இவர் நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரை வாழ்க்கையைத் தொடங்கினார்.

-விளம்பரம்-

பின் 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது குஷ்பூ அவர்கள் குணச்சித்திர வேடங்களில் படங்களில் நடித்து வருகிறார். இவர் சினிமா படங்களில் இல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினி ஆகவும், நடுவராகவும், நடிகையாகவும் பணியாற்றி வருகிறார்.

- Advertisement -

குஷ்பூ திரைப்பயணம்:

சமீபத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த ‘அண்ணாத்த’ படத்தில் குஷ்பூ நடித்து இருந்தார். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும் வசூலும் வாரி குவித்து இருந்தது. இதனை தொடர்ந்து குஷ்பூ பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். அதேபோல் இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான மீரா என்ற சீரியலில் நடித்து இருந்தார். இந்த தொடர் பெண்கள் சுதந்திரம், பெண்கள் உரிமை ஆகியவை மையமாக கொண்டதாக இருந்தது. சமீபத்தில் தான் இந்த தொடர் முடிவடைந்தது. மேலும், இவர் பாஜக செயற்குழு உறுப்பினராக இருக்கிறார்.

குஷ்புவின் டீவ்ட்:

சமீப காலமாக குஷ்பு கட்சிப் பணியில் தீவிர கவனம் செலுத்தி வருவதால் சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் திமுகவை சேர்ந்த சைதை சாதிக் என்பவர் பாஜகவில் நான்கு நடிகைகள் தான் கட்சியை வளர்க்கிறார்கள் என்று சர்ச்சைக்குரிய கருத்தை பேசி இருந்தார். இதை பார்த்து ஆத்திரம் அடைந்த குஷ்பூ ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதில் அவர், ஆண்கள் பெண்களை தவறாகப்பேசுவது என்பது அவர்கள் வளர்க்கப்பட்ட விதத்தையும், அவர்கள் வளர்ந்த மோசமான சூழலையும் காட்டுகிறது. இந்த ஆண்கள் ஒரு பெண்ணின் கருப்பையை அவமதிக்கிறார்கள். இதுபோன்ற ஆண்கள் தங்களை ‘கலைஞரை பின்பற்றுபவர்கள்’ என்று அழைத்துக் கொள்கிறார்கள்.

-விளம்பரம்-

குஷ்பூவிடம் மன்னிப்பு கேட்ட கனிமொழி:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் இதுதான் புதிய திராவிட மாடலா? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி ஆகியோரின் ட்விட்டர் கணக்குகளை டேக் செய்து கேள்வி எழுப்பியிருந்தார். இதை அடுத்து குஷ்புவின் ட்வீட்டிற்கு கனிமொழி பதில் பதிவு போட்டு இருக்கிறார். அதில் அவர், ஒரு பெண்ணாகவும், மனிதராகவும் இதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். இதை யார் செய்திருந்தாலும், சொன்ன இடம் அல்லது அவர்கள் சார்ந்த கட்சி எதுவாக இருந்தாலும் இது எக்காரணத்தைக் கொண்டும் சகித்துக்கொள்ள முடியாதது. இதற்காக என்னால் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்க முடிகிறது.

மன்னிப்பு கேட்ட சைதை சாதிக்:

ஏனெனில், எனது தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் எனது கட்சியான திமுகவுக்கும் இது ஒருபோதும் ஏற்புடையது இல்லை என்று கூறி இருக்கிறார். இதனை அடுத்து குஷ்பூவும், உங்களுடைய நிலைப்பாட்டுக்கும் ஆதரவுக்கும் நன்றி. ஆனால், நீங்கள் எப்போதும் பெண்களின் மதிப்பு மற்றும் சுயமரியாதைக்காக குரல் கொடுத்தவர் என்று கூறி இருக்கிறார். இவர்களை தொடர்ந்து சைதை சாதிக், திமுகவை நாங்கள் யாரை வைத்து வளர்த்தோம். அவர்கள் நடிகைகளை வைத்து வளர்க்கின்றனர் என்று தான் பேசினேன். மாற்றுக்கட்சி பெண்களை இழிவாக பேசுவது எங்கள் நோக்கம் கிடையாது. இதனால் குஷ்பு உள்ளிட்டவர்களை காயப்படுத்தி இருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி இருந்தார்.

Advertisement