சஸ்பென்ஸ் திரில்லராக வெளியாகியுள்ள ‘கொலைகாரன்’ படத்தின் விமர்சனம்.!

0
1162
Kolaikaran
- Advertisement -

வித்யாசமான கதைக்களங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய் ஆண்டனி தற்போது ‘கொலைகாரன்’ படத்தில் நடித்துள்ளார். ஆண்ட்ரே லூயிஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த படத்திற்கு சைமன் இசையமைத்துள்ளார். அர்ஜுன், அஷிமா நர்வால், சீதா, நாசர், பகவதி பெருமாள், சம்பத் ராம் நடித்துள்ள இந்த படத்தின் விமர்சனத்தை இப்போது காணலாம்.

-விளம்பரம்-
Image result for kolaikaran

கதைக்களம் :

- Advertisement -

படத்தின் தலைப்பிற்கு ஏற்றார் போல இந்த படம் கில்லர் மற்றும் த்ரில்லர் படமாக அமைக்கபட்டுள்ளது. படத்தின் கதாநாயகனான விஜய் ஆண்டனி ஒரு கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். விஜய் ஆண்டனியின் மற்ற படங்களை போலவே இந்த படத்திலும் அவரது கதாபாத்திரம் யாரிடமும் அதிகம் பேசாமல் மிகவும் இறுகிய மனிதராகவே அமைக்கபட்டுள்ளது.

ஒரு கொலை நடக்கிறது அந்த கொலை யார்? எதற்காக செய்தார்கள் என்பதை படம் முழுவதும் காண்பிக்கின்றனர். அந்த கொலை எப்படி நடந்தது என்பதை ஆராயும் போலீஸ் அதிகாரியாக வருகிறார் ஆக்சன் கிங் அர்ஜுன். மேலும், நடைபெறும் கொலைக்கும் விஜய் ஆண்டனிக்கும் என்ன தொடர்பு? அவர் தான் பல கொலைகளை செய்தாரா என்பதை திரில்லர் மற்றும் சில சஸ்பென்ஸ் உடன் கதை நகர்கிறது.

-விளம்பரம்-
Related image

படத்தின் முதல் பாதியில் ஹீரோவான விஜய் ஆண்டனி, ஹீரோயின் ஆஷிமா மீது காதல் கொள்கிறார். ஒரு கட்டத்தில் ஆஷிமவிற்குா மர்ம நபர்களால் பிரச்சனை ஏற்பட அதனை எப்படி சமாளிப்பது என்று முயல்கிறார் விஜய் ஆண்டனி. இதனிடையே தொடர்ந்து கொலை நடந்து வர விஜய் ஆண்டனி மீது அர்ஜுனுக்கு சந்தேகம் திரும்ப அவரிடம் விசாரணையை துவங்குகிறார்.

இறுதியில் கொலை செய்யப்பட்டது யார், கொலைகளை யார் செய்தார்கள் ஆஷிமா ஆபத்திலிருந்து தப்பித்தாரா, ஆஷிமா, விஜய் ஆண்டனி இருவரும் காதிலில் ஒன்று சேர்ந்தார்களா, அர்ஜூன் தேடி வந்த கொலைகாரன் யார் என்பதே கதை. இதனை பல ட்விஸ்ட் மட்டும் சஸ்பென்ஸ் கட்சிகளுடன் கொடுத்துள்ளார் இயக்குனர்.

ப்ளஸ் :

படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் விஜய் ஆண்டனி மற்றும் அர்ஜுன் தான். இவர்கள் இருவருக்கும் நடைபெறும் காட்சிகள் மிகவும் சுவாரசியமாக உள்ளது. மேலும், இசையமைப்பாளர் சைமன் திரில்லர் படத்திற்கு தேவையான கச்சிதமான பின்னணி இசையை கொடுத்து மிரட்டியுள்ளார்.

முதல் பாதி வரை படம் சற்று சஸ்பென்ஸ் கதைக்குள் செல்லாமல் மெதுவாக நகர்ந்தாலும், முதல் பாதியில் மிஸ்ஸான சஸ்பென்ஸ் மற்றும் த்ரில் காட்சிகள் இரண்டாம் பாதியில் சேர்த்து கொடுத்திருக்கிறார்கள். படத்தின் ஒளிப்பதிவும் திரில்லர் படத்திற்கு ஏற்றவாறு மிகவும் வலுவாக அமைந்துள்ளது.

ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் இப்படத்திலும் ஒரு போலிஸ் அதிகாரியாக மிரட்டியுள்ளார். அவர் வழக்கை அணுகும் விதம், அவருக்கே உண்டான தோரணை, ஸ்டைல் என கேரக்டருடன் பொருந்துகிறது. வழக்கு விசாரணையில் அவருக்கு ஆலோசனை வழங்கும் நாசரின் வசனும் நம்மை யோசிக்க வைக்கிறது.

காமெடிக்கு இடம் கொடுக்காமல் சஸ்பென்ஸ் திரில்லர் படம் எந்த பாதையில் செல்ல வேண்டுமே அதே பாதையில் படத்தின் இறுதி வரை நகர்வது பாராட்டக்கூடியது. அதே போல படத்தில் மொத்தம் இரண்டு பாடல்கள் மட்டும் என்பது மேலும் ஒரு மகிழ்ச்சி.

Image result for kolaikaran

மைனஸ் :

படத்தின் மைனஸ் என்றால் படத்தின் முதல் பாதியை கூறலாம். மிகவும் போர் இல்லை என்றாலும் படத்தின் முக்கிய கருவிற்கு ரசிகர்களை கொண்டு செல்ல நிறைய நேரத்தை எடுத்துக்கொண்டுள்ளனர். அதே போல படத்தில் வரும் இரண்டு பாடல்களும் டூயட் பாடல்கள் தான். அந்த பாடல்கள் இல்லாமல் இருந்திருந்தலே படத்திற்கு எந்த பாதிப்பும் இருந்திருக்காது.

இறுதி அலசல் :

எப்போதும் வித்யாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய் ஆண்டனி இந்த படத்தையும் அப்படி தான் தேர்ந்தெடுத்துள்ளார். படத்தில் ஏகப்பட்ட வைப்பதாக எண்ணி கொஞ்சம் சுதப்பியும் உள்ளனர். குடும்ப பெண்களுக்கு ஒரு சில காட்சிகள் புரியாமலும் போகலாம். மொத்தத்தில் இந்த படம் ஒரு ஏற்க கூடிய சஸ்பென்ஸ் திரில்லர் படமாக வந்துள்ளது.

Advertisement