சமந்தா-நாக சைத்தன்யா விவாகரத்து குறித்து தெலுங்கானா பெண் அமைச்சர் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக சோசியல் மீடியா முழுவதும் நாக சைதன்யா- சோபிதா திருமணம் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா மகன் ஆவார்.

நாக சைதன்யா- சமந்தா இருவரும் காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இருவரும் தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடிகளாக வலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா-நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிந்திருந்தார்கள். இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
சமந்தா-நாக சைதன்யா பிரிவு:
இதுவரை இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை? ஏன் பிரிந்தார்கள்? என்று எந்த விவரமும் தெரியவில்லை.
பிரிவிற்கு பின் சமந்தா தன் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். நடிகர் நாக சைதன்யா, நடிகை சோபிதாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக சோசியல் மீடியாவில் வதந்திகள் பரவி இருந்தது. இவர்கள் இருவரும் வெளிநாடுகளில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி இருந்தது. ஆனால், இது குறித்து இவர்கள் இருவரும் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.

நாக சைதன்யா- சோபிதா நிச்சயதார்த்தம்:
சமீபத்தில் தான் நாக சைதன்யா-சோபித்தா நிச்சயதார்த்தம் நாக சைதன்யாவின் வீட்டில் நடந்தது.
சோசியல் மீடியா முழுவதும் இவர்களுடைய நிச்சயதார்த்த புகைப்படங்கள் தான் வைரலாகி இருந்தது. கூடிய விரைவில் இவர்களின் திருமண தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது. சிலர் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தாலும், சிலர் நாக சைத்தன்யாவை விமர்சித்து வருகிறார்கள்.
ఎన్ కన్వెన్షన్ ను కూల్చివేయకుండా ఉండాలంటే
— BIG TV Breaking News (@bigtvtelugu) October 2, 2024
సమంతను తన దగ్గరకు పంపాలని కేటీఆర్ డిమాండ్ చేశాడు : కొండా సురేఖ
సమంతను కేటీఆర్ దగ్గరకు వెళ్లమని నాగార్జున వాళ్లు ఒత్తిడి చేశారు.
సమంత అందుకు ఒప్పుకోలేదు.
దీంతో వెళితే వెళ్లు లేదంటే లేదు అని సమంతకు విడాకులు ఇచ్చారు.
మంత్రి కొండా… pic.twitter.com/VXlxgYWKpG
பெண் அமைச்சர் பேட்டி:
இப்படி இருந்துமே நாக சைதன்யா- சமந்தா குறித்த ஏதாவது ஒரு செய்தி இணையத்தில் வைரலாக்கப்பட்டு தான் வருகிறது. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தின் அமைச்சர் கொண்டா சுரேகா அளித்திருக்கும் பேட்டி தான் தான் தற்போது சர்ச்சையாகி இருக்கிறது. அதாவது, பெண் அமைச்சர் அளித்த பேட்டியில், சமந்தா-நாக சைதன்யா விவாகரத்திற்கு KT ராமா ராவ் தான் காரணம். KT ராமா ராவ் செய்த விஷயங்களால் தான் பல நடிகைகள் திருமணம் செய்து கொண்டு தெலுங்கு சினிமாவை விட்டு போய்விட்டார்கள் என்றெல்லாம் பேசி இருந்தார்.
గౌరవనీయ మంత్రివర్యులు శ్రీమతి కొండా సురేఖ గారి వ్యాఖ్యలని తీవ్రంగా ఖండిస్తున్నాను. రాజకీయాలకు దూరంగా ఉండే సినీ ప్రముఖుల జీవితాలని, మీ ప్రత్యర్ధులని విమర్శించేందుకు వాడుకోకండి. దయచేసి సాటి మనుషుల వ్యక్తిగత విషయాలని గౌరవించండి. బాధ్యత గలిగిన పదవి లో ఉన్న మహిళగా మీరు చేసిన…
— Nagarjuna Akkineni (@iamnagarjuna) October 2, 2024
நாகர்ஜுனா டீவ்ட்:
இப்படி இவர் பேசியிருந்தது இணையத்தில் மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகி இருக்கிறது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நடிகர் நாகர்ஜுனா டீவ்ட் ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர், உங்கள் அரசியலுக்காக சினிமா நடிகர்களுடைய வாழ்க்கையை பயன்படுத்தாதீர்கள். அடுத்தவர்களுடைய பிரைவசிக்கும் மதிப்பு கொடுங்கள். பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு பெண் இப்படி என் குடும்பத்தை பற்றி பொய்யான குற்றச்சாட்டு வைப்பது சரியில்லை. உங்கள் கருத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள் என்று கோபமாக பதிலளித்திருக்கிறார்.






