வறுமையான குடும்பம், சிறு வயதில் அறிவுரை சொல்லி அனுப்பிய எம் ஜி ஆர். இன்று பிறந்தநாள் காணும் சரளா குமாரி கோவை சரளாவான கதை.

0
735
Kovaisarala
- Advertisement -

நடிகை கோவை சரளாவைப் பற்றி பலரும் அறிந்திடாத சில தகவல்கள் குறித்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் நகைச்சுவை ராணி ஆச்சி மனோரமாவுக்குப் பிறகு காமெடி இளவரசியாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் கோவை சரளா. இவர் தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக பிரபலமான நகைச்சுவை நடிகையாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். பெரும்பாலும் இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தான் நடித்திருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இவர் இதுவரை 800 படங்களுக்கும் மேல் நடித்துவிட்டவர். இன்றும் ஓர் இளம் நடிகையைப்போல உற்சாகம் குறையாமல் வலம் வருகிறார். தற்போதும் இவர் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கியிருக்கும் “செம்பி” என்ற திரைப்படத்தில் ஒரு குணச்சித்திர வேடத்தில் நடித்து இருக்கிறார் சரளா. இந்த பட்டத்தில் அஸ்வின் குமார், விஜய் டிவி புகழ், தம்பி ராமையா போன்ற பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இந்நிலையில் கோவை சரளாவைப் பற்றி பலரும் அறிந்திடாத சில தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

கோவை சரளா குறித்த தகவல்:

அதாவது, இவரின் உண்மையான பெயர் சரளா குமாரி. இவர் கோவையில் பிறந்து வளர்ந்தவர். ராணுவ அதிகாரியின் கடைசி மகளாக பிறந்த இவருக்கு நான்கு சகோதரிகளும், ஒரு சகோதரரும் இருக்கிறார்கள். ஐந்து வயது குழந்தையாக இருக்கும்போதே தன்னை சினிமாவில் சேர்த்து விட வேண்டும் என்று பெற்றோர்களிடம் இவர் அடம் பிடித்து இருக்கிறார். அதோடு இவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகை. எம் ஜி ஆர் கோவைக்கு வரும் போதெல்லாம் மேடைக்கு முன் நின்று கைதட்டி வந்துள்ளார்.

கோவை சரளா குடும்பம்:

இதனை ஒரு முறை பார்த்துள்ள எம் ஜி ஆர் படிக்கிற வயதில் இப்படி மேடையெல்லாம் வந்து நிற்கக்கூடாது. படித்து முடித்த பிறகு வந்து என்னை பாரென்று எம்ஜிஆர் அறிவுரை கூறினார். ஐந்து பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை என மொத்தம் ஆறு குழந்தைகளுடன் வறுமையில் வாடிய கோவை சரளாவின் குடும்பத்திற்கு கல்வி உதவித்தொகையை எம்ஜிஆர் வழங்கி இருந்தார். எம்ஜிஆர் கொடுத்த உதவித்தொகையின் மூலம் தான் இவர் படித்தார். அது மட்டும் இல்லாமல் வருங்காலத்தில் தானும் எம்ஜிஆர் போலவே பொது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்பினார்.

-விளம்பரம்-

சினிமா பயணம்:

ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது கோவையில் பல மேடை நாடகங்களில் கோவை சரளா நடித்திருந்தார். அதன் பின் இவர் வெள்ளி ரதம் என்ற படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். அதன் பின் பாக்யராஜ் நடித்த முந்தானை முடிச்சு படம் மூலம் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். இப்படி 40 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் 800 படங்கள் நடித்து இருக்கிறார் கோவை சரளா. இவர் சினிமா துறையில் பல சாதனைகள் செய்தாலும், இவர் வாழ்க்கையில் தோற்று போனார்.

கோவை சரளா பிறந்தநாள்:

இவர் திருமணமே செய்து கொள்ளவில்லை. தன்னுடைய 4 சகோதரிகளுக்கும், ஒரு சகோதரனுக்கும் நல்ல முறையில் திருமணம் செய்துவிட்டு அவர்களின் குழந்தைகளை தன் குழந்தைகளாக பாவித்து வளர்த்து வருகிறார். இவருக்கு சிறு வயதிலிருந்தே எம்ஜிஆர்ரை பிடிக்கும் என்பதால் படிக்க முடியாத பல ஏழை குழந்தைகளுக்கு படிப்பு, வயதானவரின் நலனுக்கு ஏராளமான உதவி என செய்து வருகிறார் . இந்நிலையில் இன்று கோவை சரளாவின் பிறந்தநாள். இவருடைய பிறந்தநாளையொட்டி ரசிகர்கள், பிரபலங்கள் என பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement