அம்புலன்ஸ் மட்டும் இல்லை, குழந்தைகளுக்கு பாலா செய்து வரும் உதவி – உதவி செய்ய தூண்டிய 2019 ஆம் ஆண்டு சம்பவம் குறித்து நெகிழும் பாலா

0
855
- Advertisement -

வயதானவர்களுக்கு ஆம்புலன்ஸ், 29 மாணவர்களுக்கு ஃபீஸ், இதைவிட போதை இல்லை என்று kpy பாலா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்கே பாலா ஆம்புலன்ஸ் வாங்கி தந்தது தான். விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. இவரை அனைவரும் வெட்டுக்கிளி என்று தான் அழைப்பார்கள். நிகழ்ச்சியில் இவர் மற்றவர்கள் கொடுக்கும் கவுண்ட்டருக்கு உடனடியாக பதில் கவுண்ட்டர் கொடுத்து விடுவார். அதற்க்காக இவர் இரவு பகலாக தன்னை தானே தயார் படுத்திக் கொண்டு இருந்தார்.

-விளம்பரம்-

அந்த வகையில் இவருக்கு திருப்புமுனையாக இருந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியின் மூலம் பாலா மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார். தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதோடு இவர் பல்வேறு நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகவும், விஜே வாகவும் பணியாற்றி வருகிறார். மேலும், பாலா நடிகர் மட்டுமில்லாமல், சமூக அக்கறை கொண்ட நபரும் ஆவார். இவர் தான் சம்பாதித்த பணத்தின் மூலம் தன் பகுதியில் உள்ள சிறியவர்களை படிக்க வைப்பதுடன், ஆதரவற்ற குழந்தைகளை படிக்க வைப்பது, ஆதரவற்ற பெரியோர்களின் மருத்துவ செலவிற்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்தும் வருகிறார்.

- Advertisement -

சமூக சேவை செய்யும் பாலா:

அதுமட்டும் இல்லாமல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிடைக்கும் பரிசுகளை கூட அவர் ஆதரவற்ற இல்லத்திற்கு தான் கொடுத்திருக்கிறார். சமீபத்தில் கூட பாலா பிறந்த நாளை ஒட்டி முதியோர் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கிக் கொடுத்திருந்தார். இது குறித்து பலருமே பாராட்டி இருந்தார்கள். இந்த நிலையில் இவர் மீண்டும் ஈரோடு அருகே உள்ள கடம்பூர் மலைவாழ் மக்களுக்காக இன்னொரு இலவச ஆம்புலன்ஸை பாலா வாங்கித் தந்திருக்கிறார். இந்த மலைவாழ் பகுதியில் 8000 பேருக்கு மேல் மக்கள் வாழ்கிறார்கள். இந்த இடத்தில் ஆம்புலன்ஸ் வசதி சுத்தமாகவே இல்லை.

KPY பாலா செய்த உதவி:

அது மட்டும் இல்லாமல் பாம்பு கடித்தாலும், ஹார்ட் அட்டாக் வந்தாலும், அவசர சிகிச்சை என்றாலும் உடனடியாக மருத்துவமனைக்கு போக முடியாமல் பல பேர் இறந்து இருக்கிறார்கள். இதை அறிந்த பாலா அவர்களுக்கு வாக்குறுதி அளித்து வெளிநாடுகள், உள்ளூரு என்று தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்தி அதன் மூலம் சம்பாதித்த பணத்தை வைத்து தற்போது ஆம்புலன்ஸ் வாங்கி தந்திருக்கிறார். மேலும், 10 லட்சம் மதிப்பில் வென்டிட்டர் உட்பட அனைத்து வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி கொடுத்திருக்கிறார். இந்நிலையில் இது தொடர்பாக பாலாவை பிரபல சேனல் பேட்டி எடுத்திருக்கிறது. அதில் அவர், நான் ஏற்கனவே பெரியவர்களுக்காக அறந்தாங்கியில் ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்திருந்தேன்.

-விளம்பரம்-

பாலா அளித்த பேட்டி:

அதை பார்த்துவிட்டு ஒருவர் என்னிடம் இங்கேயும் 12 கிராமத்தில் கிட்டத்தட்ட 8,000 மக்கள் இருக்கிறார்கள். அங்கு கரடி, சிறுத்தை, பாம்பு எல்லாம் கடித்து மருத்துவமனைக்கு கூட்டிட்டு போக சிரமமாக இருக்கிறது. கடம்பூரில் இருந்து தான் ஆம்புலன்ஸ் வர வைக்கணும் என்று சொன்னார். அவர்கள் சொன்னது ஈரோடு மாவட்டம் கடம்பூர் பக்கத்தில் இருக்கின்ற குன்றிமலை கிராமம் என்று தெரிந்தது. ஆம்புலன்ஸ் வர நேரம் ஆவதால் பல உயிர்கள் போயிருப்பதாக கேள்விப்பட்டேன்.

அதற்காக தான் அவர்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுக்கணும் என்று முடிவு செய்து கிட்டத்தட்ட ஒன்றரை மாசம் வரைக்கும் இதற்காக பணத்தை ரெடி பண்ணேன். உனக்குன்னு ஏதாவது வச்சுக்கோ என்று எல்லோரும் சொல்வார்கள். ஒரு மனிதனுடைய சராசரி வாழ்க்கை இப்ப 50 வயது தான்.இது எங்கள் வாழ்க்கைக்கான உதவி என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார். அவர் சொன்ன வார்த்தைகளுக்கெல்லாம் நான் தகுதியான ஆளா என்று தெரியவில்லை. நன்றி உணர்வு ரொம்ப முக்கியம் என்பது நான் எப்பவும் நினைப்பேன்.

உதவி செய்ய காரணம் :

என்னை முதன்முதலாக அறிமுகப்படுத்தியது அமுதவாணன் அண்ணன் தான். அவர் ஆரம்பத்திலேயே மற்றவர்கள் உதவி பண்ணனும் என்று சொல்வார்.. நான் இந்த மாதிரியான விஷயங்களை முன்னெடுத்ததற்கு அவரும் ஒரு முக்கிய காரணம். 2019ல் ஒரு குழந்தை படிப்பதற்காக பீஸ் கட்டினேன். அது என்னுடைய மனசுக்கு ரொம்ப மன நிறைவாக இருந்தது. இந்த வருஷம் 29 குழந்தைகளுக்கு பீஸ் கட்டிருக்கிறேன். படிப்பு குழந்தைகளுக்கு ரொம்பவே முக்கியம் என்று நினைப்பவன். படிக்கணும் என்று ஆசைப்படுகிற குழந்தைகளை படிக்க வைக்கும் போது அவங்க முகத்தில் வருகிற சந்தோஷத்தை பார்க்க அதைவிட சிறந்த போதை எனக்கு வேறு எதுவுமே இல்லை என்று கூறியிருக்கிறார்.

Advertisement