அமீர் மாமா ஷூட்டிங் ஸ்பாட்டில் அப்படி பார்த்தவன் நான் – ஞானவேல் ராஜாவிற்கு திருக்குறள் சொல்லி பாடம் புகட்டிய குட்டிசாக்கு

0
195
- Advertisement -

தற்போது சோசியல் மீடியா முழுவதும் அமீர்-ஞானவேல் ராஜா சர்ச்சை தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்த ஜப்பான் படத்தின் விழாவில் கார்த்தியை வைத்து படம் இயக்கிய பல இயக்குனர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். ஆனால், அமீர் மட்டும் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து பேட்டியில் அமீர், ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு என்னை யாரும் அழைக்கவில்லை. அதனால் நானும் போகவில்லை.
பருத்திவீரன் படத்தின் வெற்றியால் தான் கார்த்திக் இந்த அளவிற்கு உயர்ந்து இருக்கிறார். சிவக்குமார், சூர்யா, கார்த்திக் குடும்பத்துடன் எனக்கு நெருக்கமான பழக்கம் இருந்தது. ஆனால், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான் எங்களுடைய நட்பை கெடுத்து விட்டார்.

-விளம்பரம்-
karupazhalini

அவரால் எனக்கு இரண்டு கோடிக்கும் மேல் அதிகமாக நஷ்டம் ஏற்பட்டது. அதற்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான் காரணம். அவரிடம் எனக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்து பேசியும் நீதி கிடைக்கவில்லை என்று கூறி இருந்தார். இதன் பின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, பருத்திவீரன் படத்தை நானாக தயாரிக்கவில்லை. அதுவும் அமீருக்காக தான். அமீர் என்னிடம் பல லட்சங்கள் கடன் வாங்கி இருக்கிறார். அதனை கொடுக்க முடியாமல் தான் பருத்திவீரன் படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் அவர் இயக்கி கொடுப்பதாக சொன்னார். சுமார் 2 கோடி பட்ஜெட்டில் ஃபர்ஸ்ட் காபி தருவதாக சொல்லிவிட்டு இரண்டு வருடங்களில் 4 கோடி வரை செலவு செய்தார். அப்போது அமீர் பருத்திவீரன் எடுத்த பட்ஜெட்டில் 4 படங்களை தயாரித்திருக்கலாம்.

- Advertisement -

பருத்திவீரன் சர்ச்சை:

இப்போதும் அவர் சொன்னால் எத்தனை பேர் முன்னிலையிலும் பருத்திவீரன் பிரச்சனை குறித்து நான் பேச தயார். அவருக்கு அவ்வளவு சீன் எல்லாம் கிடையாது. இனி அமீர் இந்த விஷயம் குறித்து பேசிக் கொண்டே இருந்தால் நானும் விடமாட்டேன் பதிலடி கொடுப்பேன். என்னை மட்டும் இல்லாமல் இன்னும் சில தயாரிப்பாளர்களிடமும் பணம் வாங்கிக் கொண்டு அமீர் மோசடி செய்து இருக்கிறார். அமீர் ஒரு திருடன் என்று விமர்சித்து கூறியிருக்கிறார். தற்போது கோலிவுட் வட்டாரத்தில் இந்த விவகாரம் பயங்கர சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

பிரபலங்கள் கொந்தளிப்பு:

மேலும் ஞானவேல் ராஜாவை விமர்சித்து இயக்குனர் சமுத்திரக்கனி, சசிகுமார், சுதா, பொன்வண்ணன், சினேகன், பழனியப்பன், பாரதிராஜா என பல பிரபலங்கள் கடுமையாக கண்டித்து பேசி இருந்தார்கள். இப்படி கோலிவுட் வட்டாரத்திலேயே அமீரின் விவகாரம் தான் ஹாட் டாபிக்காக சென்று கொண்டிருக்கும் நிலையில் கார்த்திக், சூர்யா இருவருமே அமைதி காப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இந்த நிலையில் பருத்திவீரன் படத்தில் குட்டிசாக்கு என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் விமல் ராஜ். இவர் ஞானவேல் ராஜாவிற்கு எதிராக அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், திரு ஞானவேல் அவர்கள் பேசிய காணொளியை பார்க்க நேர்ந்தது.

-விளம்பரம்-

விமல் ராஜ் அறிக்கை:

தெருக்களில் விளையாடி கொண்டிருந்த என்னை அழைத்து நடிப்பு சொல்லி கொடுத்து எனக்கு வாய்ப்பு கொடுத்த அமீர் மாமா மீது இப்படியான பழிகளை சுமர்த்தியது மிகவும் வேதனையை ஏற்படுத்தியது. படம் பாதியிலையே விட்டுட்டு போன நீங்கள் அதன் பிறகு அங்கு நடந்த சம்பவங்களை நேரில்’ பார்த்த நபர் என்ற முறையில் நான் நன்கு அறிவேன். படம் ஆரம்பத்தில் இருந்த மகிழ்ச்சியான அமீர் மாமா அதன் பிறகு அவருக்கு அதனால் ஏற்பட்ட மன அழுத்தம் அதை அனைத்தையும் படபிடிப்பு தளத்தில் அருகில் இருந்து பார்த்தவன் நான். எனவே ஞானவேல் அவர்கள் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டும். எனக்கும் கார்த்திக் அண்ணாவுக்கும் அது தான் முதல் படம். அவரும் அந்த சூழலை நன்கு அறிவார் தற்போது அவர் அமைதி காப்பது மிகவும் தவறான செயல்.

குறள்932:

ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம்மூன்றும் இழுக்கார் குடிப்பிறந் தார்.

விளக்கம்:

நல்ல குடும்பத்தில் பிறந்தவர் ஒழுக்கம், உண்மை, நாணம் என்னும் இம்மூன்றிலிருந்தும் விலகமாட்டார் என்று குறி இருக்கிறார். இப்படி அனைவருமே தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு எதிராக திரும்பி உடன் ஞானவேல் அமீரிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.

ஞானவேல் ராஜா மன்னிப்பு அறிக்கை:

அதில் பருத்திவீரன் ஒன்றை பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்துகொண்டு இருகிறது. இதுநாள் வரை அதை பற்றி நான் பேசியது கிடையாது. என்றைக்குமே அவரை நான் அமீர் அண்ணா என்று தான் அழைப்பேன். ஆரம்பித்தில் இருந்தே அவர் குடும்பத்தினருடன் அழைப்பேன். பழகி இருக்கிறேன். சமீபத்திய பேட்டிகளில் என்ன குறித்து அவர் கூறிய பொய்யான குற்றசாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது.அதற்கு பதிலளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அமீர் அண்ணன் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான் என்று கூறி இருக்கிறார்.

Advertisement