ஆளுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அம்மாசியப்பன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜக புகார் மனு. காரணம் என்ன?

0
1143
- Advertisement -

ஆளுநரிடம் நீட் தேர்வு ரத்து குறித்து பேசிய அம்மாசியப்பனைகைது செய்ய கோரிக்கை விடுத்த சேலம் கிழக்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் புகார் ஒன்றை அளித்துள்ளனர். 2023 ஆம் பெற்ற நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு குறிப்பாக 600 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு மட்டும் தங்களுடைய பெற்றோர்களுடன் சென்னை கிண்டியில் உள்ள “எண்ணித் துணிக” என்ற தலைப்பில் முதன் முறையாக ஆளுநர் ரவி உரையாடலை மேற்கொண்டார்.

-விளம்பரம்-

அந்த நிகழ்ச்சியில் பேசிய மாணவியின் பெற்றோர் ஒருவர் ஆளுநரிடம் கூறுகையில்” பள்ளிகூடங்களில் நடத்தப்படும் படங்களில் மட்டுமே நீட் தேர்வில் மாணவர்களால் தேர்ச்சி பெற முடியவில்லை. அதன் பின்னணியில் சதி உள்ளது. ஒவ்வொரு பள்ளியும் தனியார் பள்ளி நிறுவனங்களிடன் இணைந்து தான் மாணவர்களை தேர்ச்சி பெற வைத்தோம்” என்று சேலம் மனைவியின் பெற்றோர் கூறினார். மேலும் சேலத்தை சேர்ந்த மாணவரின் தந்தை ஒருவர் “ தமிழகத்தை சேர்ந்த பல மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று வருகின்றன. அவர்கள் நிறையை மதிப்பெண்களும் பெற்று வருகின்றன. இருப்பினும் நாங்கள் தொடர்ந்து நீட் விலக்கு பற்றி தொடர்ந்து பேசி வருகிறோம் என்றும் கூறினார்.

- Advertisement -

மேலும் அவர் ஆளுநரினடம் நீட் தேர்விற்கு எப்போது விலக்கு அளிப்பிர்கள் என்று கேட்டார். அதற்க்கு பதிலளித்த “நீட் தேர்விற்கு தடை கோரும் மசோதாவை ஒரு போதும் அதை நான் ஏற்றுகொள்ள மாட்டேன். ஒரு போதும் அதற்க்கு கையெழுத்திட மாட்டேன் என்றும் கூறினார். இந்த விவகாரம் பொறுத்த வரை இது பொதுப்பட்டியலில் இருப்பதால் அது குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  நீட் தேர்வை பொறுத்த வரை கோச்சிங் வகுப்பு சென்று தான் படிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை” என்றும் அவர் கூறினார்.

மாணவியின் தந்தை கூறியது:  

இந்நிலையில் ஆளுநரிடம் கேள்வி எழுப்பிய மாணவியின் தந்தை வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் நான்  சேலத்தில் உள்ள இரும்பாலையில் பணிபுரிந்து வருகிறேன் என்னுடைய மகள் மாநில அளவில் நீட் தேர்வில் 878 வது இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார் அவருக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் மகள் சேர்க்கை பெற்றுள்ளார். 

-விளம்பரம்-

அவர் மேலும் கூறுகையில்  கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் நீட் தேர்வு தேவை இல்லை என்றும் போராடி வருகின்றார் ஆனால் அந்த தேர்வை எப்படி அணுகுவது என்று தமிழக மாணவர்களுக்கு தெரியவில்லை. இன்றைய காலகட்டத்தில் பள்ளிகளில் சொல்லித் தரும் பாடங்களை மட்டும் படித்தால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாது தனியார் கோச்சிங் சென்டர் இருக்கு சென்று தான் தேர்ச்சி பெற முடிகிறது இதன் பின்னால் சதி இருக்கிறது.  இவ்வாறு நடப்பதால் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நீட் தேர்வில் மட்டுமே இதுவரை தமிழகத்தில் 15 மாணவர்கள் உயிரிழந்த உள்ளனர். என்றும் அவர் கூறியிருந்தார்.

புகார் மனு:

சேலத்தை சேர்ந்த அம்மாசியப்பன் சேலம் உருக்காலையில் சீனியர் ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தான் மகளின் தேர்ச்சி மூலம் ஆளுநரை சந்தித்துள்ளார். அதன் பின் ஆளுநரிடம் நீட் தடை பற்றி ஆளுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இரும்பாலை பொது மேலாளர் மானஸ் ராத், செயல் இயக்குநர் வி.கே.பாண்டே ஆகியோரிடம் மனு அளித்தக அவர்கள் தெரிவித்தனர்.

புகார் மனு குறித்து பேசிய பாஜக மாவட்ட தலைவர் சண்முகநாதன் “மத்திய அரசு பணியில் இருந்து கொண்டு அரசுக்கு எதிராக கருத்து கூற முடியாது. அவர் மீது நடவடிக்கை எடுக்க இரும்பாலை நிர்வாகம் மனு ஒன்றை அளித்துள்ளோம். இதனுடைய நகலை மத்திய உருக்குத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, செயில் சேர்மன் ஆகியோருக்கு அனுப்பியிருக்கிறோம்“ என்று கூறினார்.     

Advertisement