திருவண்ணாமலையில் மண் சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சந்தித்து பாலா செய்த உதவி

0
221
- Advertisement -

திருவண்ணாமலை மண்சரிவால் உயிரிழந்த குடும்பத்திற்கு கேபிஒய் பாலா செய்து இருக்கும் உதவி குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைலாகி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் ஒட்டு மொத்த தமிழகத்தையும் ஃபெஞ்சல் புயல் புரட்டி போட்டு இருந்தது அனைவரும் அறிந்ததே. இந்த புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தி இருந்தது. இந்த புயல் கரையை கடக்கவே இரண்டு நாட்கள் ஆனது. இதனால் மழைப்பொழிவு அதிகமாக இருந்தது.

-விளம்பரம்-

இதன் காரணமாக ஆங்காங்கே நீர் தேங்கியும், வெள்ள பெருக்கெடுத்தும் சென்றிருந்தது. மேலும், புயலால் திருவண்ணாமலையில் யாரும் எதிர்பாராத வகையில் கனத்த மழை பெய்தது. இந்த மழையால் கனத்த நிலச்சரிவு ஏற்பட்டு இருந்தது. இந்த சம்பவம் அறிந்து மீட்பு பணிகள் தீவிரமாக செயல்பட்டு இருந்தார்கள். இருந்துமே இந்த நிலச்சரிவில் ஏழு பேர் அநியாயமாக உயிர் இழந்து இருந்தார்கள்.

- Advertisement -

திருவண்ணாமலை மண்சரிவு:

மேலும், தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டதால் மின்சாரம் துண்டிப்பு என பல தடங்கல்கள் ஏற்பட்டது. இதனால் மீட்பு பணியும் தாமதமாக இருந்தது. இரண்டு நாட்கள் போராட்டத்திற்கு பிறகு தான் ஒவ்வொரு சடலமாகவே எடுத்தார்கள். ஒரே குடும்பத்தில் கணவன், மனைவி அவர்களுடைய இரண்டு குழந்தைகளுடன் அங்கு விளையாட வந்த மூன்று குழந்தைகள் என மொத்தம் ஏழு பேர் இறந்திருக்கிறார்கள்.

விஜய் செய்த உதவி:

இது அந்த பகுதியில் பெரும் துரயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதை அடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நிவாரணம் அறிவித்திருந்தார். அதோடு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பேருந்து மூலம் பனையூருக்கு அழைத்து சென்று ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை மற்றும் நிவாரண பொருட்களை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வழங்கி இருந்தார். தன்னுடைய சொந்த பணத்தில் விஜய் செய்து இருந்த உதவியை பலரும் பாராட்டி இருந்தார்கள்.

-விளம்பரம்-

கேபிஒய் பாலா செய்த உதவி:

இப்படி இருக்கும் நிலையில் கேபிஒய் பாலா செய்திருக்கும் செயல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு பாலா நேரில் சென்று பார்வையிட்டு இறந்தவரின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி அவர்களுடைய குடும்பத்திற்கு ஆறுதலும் கூறுகிறார். அது மட்டும் இல்லாது தன்னால் முடிந்த உதவித்தொகையும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கொடுத்திருக்கிறார். தற்போது இது தொடர்பான வீடியோ வைரலானதை தொடர்ந்து பாலாவின் செயலை பாராட்டி வருகிறார்கள்.

பாலா குறித்த தகவல்:

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. அதற்கு பின் இவர் பல நிகழ்ச்சிகளில் கலந்து இருந்தார். தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்தும், பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், விஜே வாகவும் பணியாற்றி வருகிறார். மேலும், பாலா அவர்கள் நடிகர் மட்டுமில்லாமல், சமூக அக்கறை கொண்ட நபரும் ஆவார். இவர் தான் சம்பாதித்த பணத்தின் மூலம் தன் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை படிக்க வைப்பது, மருத்துவ செலவு என தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.

Advertisement