சிவகார்த்திகேயனை முதன் முறையாக சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை பதிவிட்ட தீனா.

0
1902
Dheena
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு காமெடி நடிகர்கள் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்கள். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த தீனா சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி இருந்த கைதி படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. ஆனால், இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி தான்.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியில் இவர் சரத் என்பவருடன் இணைந்து தீனா செய்த காமெடிகள் நாம் யாராலும் மறக்க முடியாது. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் இவருக்கு கிடைத்த புகழ் மூலம் இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது இவர் தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்த ‘பா பாண்டி’ படத்தில் தனுஷின் நண்பராக நடித்திருந்தார். அதன்பின்னர் கடந்த ஆண்டு வெளியான ‘தும்பா’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த இரண்டு படங்களிலும் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இதையும் பாருங்க : ஹோட்டலில் சர்வர் வேலை பார்த்த வின்னர் பட தயாரிப்பாளர். அவரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

- Advertisement -

ஆனால், இவருக்கு மிகப் பெரிய புகழை ஏற்படுத்தித் தந்தது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘கைதி’ திரைப்படத்தின் மூலம் தான்.கைதி திரைப்படத்திற்கு பின்னர் இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் உருவாக்கினார்கள். தற்போது கைது பட இயக்குனர் இயக்கியுள்ள விஜய்யின் மாஸ்டர் படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், சமீபத்தில் நடைபெற்ற மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய்க்கு நடந்த வருமான வரி சோதனை குறித்து இவர் சூசகமாக பேசிய பேச்சு சமூகவலைதளத்தில் பெரும் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து தீனா அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகியிருக்கிறார். இவர் கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் இருந்த போதே சிவகார்த்திகேயன் இவருக்கு பரிட்சயமானார். இந்த நிலையில் இவர் சிவகார்த்திகேயனை முதன் முறையாக சந்தித்த போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement