மணிமேகலை-பிரியங்கா விவகாரம் குறித்து KPY சரத் பேசியிருக்கும் விஷயம் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில வாரங்களாவே மணிமேகலை- பிரியங்கா சர்ச்சை செய்தி தான் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி 5’ நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் கடந்த வாரம் நிகழ்ச்சியிலிருந்து திடீரென மணிமேகலை விலகி இருந்தது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக மணிமேகலை போட்ட பதிவில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இனி நான் இல்லை. இந்த சீசனில் மற்றொரு பெண் தொகுப்பாளர் ஆதிக்கம் செலுத்துகிறார். அவர் ஆங்கர் பார்ட்டில் எல்லாம் தலையிடுகிறார். அவர் நிகழ்ச்சியில் குக்காக இருக்க வேண்டும். அதை அவர் அடிக்கடி மறந்து விட்டு வேண்டுமென்றே என்னை வேலை செய்ய விடாமல் தடுக்கிறார். அதனால் தான் நான் இந்த நிகழ்ச்சியில் தொடர விரும்பவில்லை என்று எமோஷனலாக பதிவிட்டு இருந்தார்.
மணிமேகலை-பிரியங்கா விவகாரம்:
இப்படி இவர் சொன்னது தொகுப்பாளினி பிரியங்காவை தான் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது. இதை அடுத்து இந்த விவகாரம் தொடர்பாக பலருமே மணிமேகலைக்கு ஆதரவாக குரல் கொடுத்தும் , பிரியங்காவை மோசமாக விமர்சித்தும், திட்டியும் வருகிறார்கள். ஆனால், தற்போது சிலர் ப்ரியங்காவிற்கு ஆதரவாகவும் பேசி இருக்கிறார்கள். அந்த வகையில் குரேஷி, நிகழ்ச்சியில் நடந்தது என்ன என்றும், பிரியங்காவுக்கு ஆதரவாக பேசி வீடியோ போட்டு இருந்தார்.
தொர்ந்த சர்ச்சைகள்:
அதே போல் பாவனி , டிஜே பிளாக் ,சூப்பர் சிங்கர் பூஜா, சுனிதா ஆகியோர் பிரியங்காவிற்கு ஆதரவாக தங்களின் கருத்துக்களை பேசி இருந்தார்கள். இதுபோல் பிரியங்காவிற்கு ஆதரவாக பேசுபவர்களை தாக்கி சமீபத்தில் மணிமேகலை தன் கணவருடன் சேர்ந்து வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார். அதில், நீ வீடியோ போடலையா, whatsappல ஒரு மாதிரி பேசுறாங்க வீடியோவில் வேற மாதிரி பேசுறாங்க, சொம்புக்கு எல்லாம் என்ன மரியாதை என்றவாறு தாக்கி பேசியிருந்தார். பின் மணிமேகலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் குரேஷி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், மணிமேகலை தன் எல்லைகளை மீறுகிறார் என்பது போல் பதிவிட்டிருந்தார்.
KPY சரத்:
இந்நிலையில் சமீபத்தில் ‘சட்டம் என் கையில்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்துள்ளது. அதில் கலந்து கொண்ட KPY சரதிடம் மணிமேகலை- பிரியங்கா சர்ச்சை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர், இது நாட்டுக்கு தேவையான முக்கியமான விஷயங்களே கிடையாது. உண்மைய சொல்ல வேண்டும் என்றால், அவங்க போட்ட வீடியோவில் சம்பாதித்து விட்டார்கள். ஒருத்தவங்க சம்பாதிச்சுட்டு இருக்காங்க. பாக்குறவங்க நம்ம தான் ஒண்ணுமே இல்லாம இருக்கிறோம். அதனால் இது ஒரு முக்கியமான விஷயமே கிடையாது. இது ஒரு சின்ன ஈகோ மேட்டர்தான்.
டிஆர்பிக்காக பண்றாங்க:
நான் யாருக்கும் சப்போர்ட் பண்ணி சொம்பு என்று பெயர் வாங்க விரும்பவில்லை. எனக்கு யாருக்கும் சப்போர்ட் பண்ண வேண்டும் என்று அவசியம் இல்லை. அவங்க இன்னைக்கு அடிச்சுப்பாங்க நாளைக்கு சேர்ந்துப்பாங்க. அப்போ நம்ப தான் முட்டாள் ஆகிவிடுவோம். இதையெல்லாம் அவங்க ஒரு டிஆர்பிக்காக பண்றாங்கன்னு நினைக்கிறேன். நம்ம ரொம்ப ஃபேமஸ் இல்லையோ என்று நினைத்துக் கூட அவங்க இதையெல்லாம் பண்ணி இருக்கலாம் என்று கூறியுள்ளார்.