விஜய் டிவி பிரபலம் நடிகர் சரத்தின் மனைவி கிருத்திகாவை நெட்டிசன்கள் விமர்சித்து வரும் பதிவு தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சரத். இவர் பார்ப்பதற்கு அச்சு அசலாக திரைப்பட நடிகர் மொட்டை ராஜேந்தர் போன்று இருப்பார்.
மேலும், இவர் நிகழ்ச்சியில் தீனாவுடன் இணைந்து மொட்டை ராஜேந்திரன் பேசி அசத்தி காமெடிகள் செய்திருந்தார். கலக்க போவது யாரு நிகழ்ச்சிக்கு முன்பாகவே இவர் விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான வெற்றித் தொடரான கனா காணும் காலங்கள் தொடரில் நடித்து இருந்தார். ஆனால், இது பலரும் அறிந்திராத ஒரு விஷயம். அதன்பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தான் இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
கிருத்திகா-சரத் திருமணம்:
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தை வைத்து இவர் சிபிராஜ் நடிப்பில் வெளியான சத்யா படத்திலும் நடித்திருந்தார். அதற்கு பின் தன்னுடைய நீண்ட காதலியான கிருத்திகா என்பவரை சரத் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரின் மனைவி கிருத்திகாவும் மீடியாவுடன் தொடர்புடையவர் தான். இவர் முறைப்படி கிளாகிக்கல் நடனம் கற்றவர். இதுவரை இவர் பல மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். கூத்து பட்டறை நிகழ்ச்சியிலும் நடனமாடியுள்ளார்.
கிருத்திகா-சரத் குறித்த தகவல்:
பின் இவர் தன்னுடைய கணவர் சரத் உடன் சேர்ந்து mr and mrs சின்னத்திரை சீசன் 3ல் கலந்து கொண்டு டைட்டிலை வெற்றி பெற்றோர்கள். அத்ததுடன் சரத் – கிருத்திகா ஜோடிக்கு 5 லட்சம் ரொக்கத்தையும் வழங்கி இருக்கிறார்கள். அதற்கு பின் சரத் விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று இருக்கிறார்.
கிருத்திகா நடித்த விளம்பரம்:
இந்நிலையில் நடிகர் சரத்தின் மனைவியை நெட்டிசன்கள் விமர்சித்திருக்கும் பதிவு தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, கிருத்திகா டயட்டீசன் ஆவார். இவர் முறையாக படித்து பணி புரிந்து இருக்கிறார். இந்நிலையில் ஹார்லிக்ஸ் டயபடீஸ் பிளஸ் என்ற பொருளின் விளம்பரத்தில் கிருத்திகா நடித்திருக்கிறார். அதில் அவர், இந்த ஆர்லிக்ஸ் குடித்தால் உங்கள் உடல் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும் என்றெல்லாம் விளம்பரம் செய்திருக்கிறார்.
நெட்டிசன்கள் விமர்சனம்:
இந்த விளம்பர வீடியோ சோசியல் மீடியாவில் வெளியானதை தொடர்ந்து பலரும் விமர்சித்து வருகிறார்கள். அதிலும் சிலர், நீங்கள் ஹார்லிக்ஸ் குடித்து உங்களுடைய உடலை ஆரோக்கியமாகவும் ஒல்லியாகவும் வைத்திருங்கள். அதற்கு பிறகு மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வீர்கள். நீங்கள் எல்லாம் மற்றவர்களுக்கு அட்வைஸ் செய்ய வந்து விட்டீர்களா? உங்களை முதல் பாருங்கள் என்றெல்லாம் கிண்டல் அடித்திருக்கிறார்கள்.