[10:55 am, 25/03/2024] Subashinisrinivasan: ரிமோட்டை தூக்கி போட்டு டிவியை அன்று ரிமோட்டை தூக்கி போட்டு டிவியை உடைத்து இன்று கூட்டணி வைத்தது ஏன் கமல் கொடுத்த விளக்கம்[10:56 am, 25/03/2024] Subashinisrinivasan: இதுதான் அரசியலா

0
121
- Advertisement -

திமுக கட்சியில் இணைந்தது குறித்து எழுந்த சர்ச்சைகளுக்கு கமலஹாசன் கொடுத்திருக்கும் விளக்க வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் குறித்த செய்திகள் தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் குறித்த வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

-விளம்பரம்-

மேலும், தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, மற்றும் பாஜக கூட்டணி என்று மூன்று அணிகளும், நாம் தமிழர் கட்சி மற்றும் தனித்து நிற்கிறது. எனவே நான்கு கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. இதில் பாஜக தலைமையில் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், சமத்துவ மக்கள் கட்சி போன்ற பல கட்சிகள் கூட்டணி வைத்திருக்கிறது.

- Advertisement -

கமல்ஹாசன்-திமுக கூட்டணி:

அந்த வகையில் கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி திமுக கூட்டணியில் இணைந்து இருக்கிறது.
இதனை அடுத்து கமலஹாசன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து, வர இருக்கும் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. திமுக கூட்டணிக்கு எங்களுடைய எல்லா ஆதரவும் கிடைக்கும். இது பதவிக்கான விஷயம் கிடையாது, நாட்டுக்கான விஷயம். இதனால் எங்கு கைகுலுக்க வேண்டுமோ அங்கு கை குலுக்கி இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

டிவி உடைத்த கமல்ஹாசன்:

மேலும், திமுக கூட்டணிக்கு ஆதரவாக கமலஹாசன் பிரச்சார செய்யும் தகவல் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இது குறித்து சிலர் ஆதரவு தெரிவித்தாலும், சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் கமலஹாசனை விமர்சித்தும் வருகிறார்கள். அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு கமல்ஹாசன் டிவி உடைத்த நிகழ்வை தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறார்கள். அதாவது, டிவியில் கலைஞர் கருணாநிதி பேசிக் கொண்டிருக்கும்போது ஆத்திரம் தாங்காமல் கையில் இருந்த ரிமோட்டை கமலஹாசன் டிவி மேல் அடிப்பார்.

கமல் கொடுத்த விளக்கம்:

இதை தான் நெட்டிசன்கள், அன்று டிவியை உடைத்து விட்டு இன்று அந்த கட்சியில் சேர்ந்து இருக்கிறீர்கள் என்று விமர்சித்து கேள்வி கேட்டு வருகிறார்கள். இந்நிலையில் இதற்கு கமலஹாசன், சந்தர்ப்பங்கள் வேறு, விவாதங்கள் வேறு. சந்தர்ப்பங்களுக்காக விவாதங்களை ஒன்று என்று சொல்ல முடியாது. அன்னைக்கு டிவியை உடைத்து விட்டு இன்னிக்கு அதே கட்சியில் சேர்ந்திருக்கிறீர்களே? என்று கேட்கிறீர்கள். இன்னும் ரிமோட் என் கையில் தான் இருக்கிறது. டிவி உடையவில்லை. ரிமோட், டிவி நமது. எதற்காக நாம் உடைக்க வேண்டும்.

அரசியல் குறித்து சொன்னது:

நான் தனிப்பட்ட முறையில் யாரையும் தவறாக பேசியது கிடையாது, பேசவும் மாட்டேன். இந்திய பிரதமர் மோடி அவர்கள் வந்தாலுமே எழுந்து நின்று அவருக்கான மரியாதையை கொடுப்பேன். இது நான் மனிதனுக்காக கொடுக்கவில்லை. அவருடைய பதவிக்காக கொடுப்பது. உடனே, நீங்கள் அவரை விமர்சித்து பேசி எப்படி நீங்கள் அவருக்கு மரியாதை கொடுக்கலாம்? என்று கேட்பீர்கள். பதவி வேறு, மோடி வேறு என்று பேசி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement