என்னோட BMW கார்ல குழந்தைகளைக் கூட்டிட்டுப் போக இது தான் காரணம் – KPY தங்கதுரை நெகிழ்ச்சி

0
339
- Advertisement -

விலை உயர்ந்த காரில் குழந்தைகளை கூட்டிட்டு போனதற்கு இதுதான் காரணம் என்று தங்கதுரை அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சினிமா நடிகர்களை தொடர்ந்து விஜய் டிவி பிரபலங்களும் சொகுசு கார்களை வாங்கி வருகின்றனர். தற்போது அந்த வரிசையில் பழைய ஜோக் தங்கதுரை இணைந்துள்ளார். இவர் நீல நிறத்தில் காஸ்ட்லியான BMW வாங்கியிருக்கிறார். இது தொடர்பாக அவர், நீண்ட பயணம் மற்றும் நிறைய போராட்டங்களுக்குப் பிறகு எனக்கு நானே நிறைய காரை பரிசளித்துக் கொண்டேன்.

-விளம்பரம்-

மேலும் இந்த சந்தோஷத்தை நான் தேவைப்படும் குழந்தைகளிடம் பகிர்ந்து கொண்டேன். அவர்களின் சந்தோஷமும் அன்பும் விலை மதிக்க முடியாதது. உங்களின் அன்பிற்கும் சப்போர்ட்டிற்கும் நன்றி மக்களே என்று கூறி இருந்தார். இவர் காஸ்ட்லி கார் வாங்கியவுடன் பந்தாவாக குடும்பத்தினரையும் நண்பர்களையும் முதன் முதலில் காரில் ஏற்றிக்கொண்டு சுற்றாமல் ஏழை குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது காரில் சென்று இருந்தார். அது மட்டும் இல்லாமல் அவர்களுக்கு தேவைப்படும் புத்தகங்கள் மற்றும் துணிமணிகளை பரிசாக அளித்து இருந்தார்.

- Advertisement -

தங்கதுரை பேட்டி:

பின் அவர்களை ஓட்டலுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு உணவு வாங்கி கொடுத்து சந்தோஷப்படுத்தி இருக்கார். இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி இருக்கு. இதை பார்த்து பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் தங்கதுரை, என்னுடைய சின்ன வயசு ஏக்கங்களை தான் இந்த குழந்தைகள் மூலமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன். என்னுடன் மொத்தம் ஐந்து பேர் பிறந்தார்கள். அப்பா கூலி தொழிலாளி. அவரோட ஒரு வருமானத்தை வைத்து தான் நாங்கள் படித்து வளர்ந்தோம். வீட்டில் டிவி, பைக் எதுவுமே கிடையாது.

காரில் அழைத்து சென்ற காரணம்:

எங்காவது போக வேண்டும் என்றால் கூட லிப்ட் கேட்டு தான் போகும். அப்படி ஒரு வறுமையான சூழல். அந்த சூழலில் வைராக்கியத்தை வைத்து தான் நாங்கள் படித்தோம். நாங்கள் ஸ்கூல், காலேஜ் எல்லாமே பஸ்ஸில் போய் தான் படித்தோம். பஸ்ஸை மிஸ் பண்ணிட்டால் அடுத்த பஸ் வர வரைக்கும் காத்துக் கொண்டிருக்க வேண்டும், இல்லை என்றால் நடந்தே போய்விடுவோம். அதற்குப் பிறகுதான் பார்ட் டைம் வேலை பார்த்து, நிகழ்ச்சிகளில் நுழைந்து பணத்தை சேர்க்க ஆரம்பித்தேன். சின்ன வயசிலிருந்தே ரொம்ப கஷ்டத்தை பார்த்து வளர்ந்தேன். அதனால் ஏழை குழந்தைகளோட ஆசைகள், தேவைகள், வலி, வேதனை எல்லாமே எனக்கு தெரியும்.

-விளம்பரம்-

தங்கதுரை சமூக சேவை:

அதனால் தான் புதிதாக கார் வாங்கின உடன் குழந்தைகளை கூட்டிட்டு போனேன். புது கார் வாங்கின உடனே சமூக ஆர்வலர் லோகநாயகி மேடம் இடம் என்னுடைய விருப்பத்தை சொன்னேன். அவர்களும் ஒத்துக்கொண்டு அனுப்பி வைத்தார்கள். ஏற்கனவே நான் படிக்க முடியாத குழந்தைகளுக்கு உதவி கொண்டு இருக்கிறேன். இப்பவும் ரெண்டு குழந்தைகளை மூன்று வருஷமாக படிக்க வைத்து கொண்டு வருகிறேன். அந்த பழக்கத்தில் தான் கேட்டவுடன் அவர்களும் ஒத்துக் கொண்டார்கள். குழந்தைகள் காரை பார்த்த உடனே ரொம்ப குஷியாகி விட்டார்கள். இதற்கு முன்னாடி இப்படி ஒரு சந்தோசம் எனக்கு 2015 ஆம் ஆண்டு முதன் முதலாக சிப்கார்ட் வாங்கும் போது தான் கிடைத்தது.

குழந்தைகள் குறித்து சொன்னது:

அதில் எங்க அம்மாவை உட்கார வைத்து போனேன். இப்போ பிஎம்டபிள்யூ கார் வாங்கிட்டேன். உட்கார்ந்து பார்க்க அம்மா உயிரோட இல்லை. அது மட்டும் தான் என்னோட குறை. அந்த குறையும் இந்த குழந்தைகள் தீர்த்து வைத்து விட்டார்கள். இப்போது எனக்கு மன நிம்மதியாக இருக்கு. நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். முடிஞ்சவரைக்கும் ஏழை குழந்தைகளுக்கு உதவனும், படிக்க வைக்கணும் என்பதுதான் என்னுடைய ஆசை. ஒரு நாள் முழுக்க அந்த குழந்தைகளோடு இருந்தேன். அவர்களுக்கு பிடித்த உணவு, துணி எல்லாம் வாங்கி கொடுத்து அவர்கள் முகத்தில் சந்தோஷத்தை பார்த்தது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.

Advertisement