அன்று தம்பி படத்தில் குழந்தை நட்சத்திரம், இன்று அண்ணனுக்கு ஜோடி – நான் மகான் அல்ல படத்தில் வந்த இந்த குழந்தை கிரீட்டி ஷெட்டியா ? வைரலாகும் புகைப்படம் இதோ.

0
1152
kriti
- Advertisement -

தற்போது தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்பவர் கீர்த்தி ஷெட்டி. இவர் இளம் வயதிலேயே மாடலிங் துறையில் கால் பதித்தார். பின் தொடர்ந்து இவர் விளம்பர படங்களில் நடித்து தன்னுடைய அழகாலும் புன்னகையாலும் ரசிகர்களை கவர்ந்தார். மேலும், பிரபல தெலுங்கு நடிகரும், மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மருமகன் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிப்பில் வெளியாகி இருந்த படம் உப்பனா. இந்தப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார் நடிகை கீர்த்தி ஷெட்டி. இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு மகளாக கீர்த்தி ஷெட்டி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Surya – Bala Movie Start: Kirti Shetty joins as the heroine - time.news -  Time News

இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. மீண்டும் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் உடன் இனைந்து கீர்த்தி ஷெட்டி நடித்து இருந்தார். சமீபத்தில் நானி நடிப்பில் வெளியாகி இருந்த ‘ஷ்யாம் சிங்கா ராய்’ என்ற படத்தில் கீர்த்தி ஷெட்டி நடித்து இருந்தார். இந்தப் படத்தை இயக்குனர் ராகுல் சன்கிரித்யன் இயக்கி இருந்தார். இது மறுபிறவியை மையமாக கொண்டு உருவாகி இருந்த படம். இப்படத்தில் நானி, சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி, மடோனா செபஸ்டின், முரளி ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தார்கள்.

இதையும் பாருங்க : சாலை விபத்தில் உயிரிழந்த ரசிகருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய சூர்யா – சிரித்துக்கொண்டு Selfie எடுத்த ரசிகை.

- Advertisement -

சூர்யா படத்தில் கிரீட்டி :

மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி இருந்தது. அதோடு இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து தமிழில் சூர்யா – பாலா கூட்டணியில் உருவாகும் படத்தில் கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார் என்ற தகவல் இணையத்தில் வைரலாக பரவி வந்தது.

வைரலாகும் புல்லட்டு பாடல் :

அதுமட்டுமில்லாமல் ஏப்ரல் முதல் வாரமே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. தற்போது கீர்த்தி செட்டி அவர்கள் தெலுங்கில் உருவாகும் தி வாரியார் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் ராம் போதினினி கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்திற்கு டிஎஸ்பி இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிம்பு பாடிய புல்லட் எனும் பாடல் சோசியல் மீடியாவில் பயங்கரமாக வைரலாகி இருக்கிறது.

-விளம்பரம்-

நான் மகான் அல்ல படத்தில் கிரீட்டி :

இந்த நிலையில் க்ரிதி ஷெட்டி குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள தகவல் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதுவும் கார்த்தியின் நான் மகான் அல்ல படத்தில் கிரீட்டி ஷெட்டி நடித்து இருக்கிறார். சுசீந்திரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான நான் மகான் அல்ல திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து இருந்தார்.

உண்மையில் இது கிரீட்டி தானா :

இந்த படத்தின் ஒரு காட்சியில் ஷாப்பிங் ஒன்றில் கார்த்தி நடந்து செல்வார் அப்போது ஒரு அம்மாவுடன் குழந்தை ஒன்று நடந்து செல்லும் அவருக்கு கார்த்தி டாடா காட்ட, அந்த குழந்தையும் டாடா காட்டும். அந்த குழந்தை தான் கிரீட்டி ஷெட்டி என்று பலரும் தற்போது கூறி வருகின்றனர். மேலும், அந்த குழந்தை பார்ப்பதற்கு கிரீட்டி ஷெட்டி ஜாடையில் தான் இருக்கிறது.

Advertisement