இந்த காட்சியில் நடிக்கும் போது அவருக்கு 17 வயது தானே இருந்திருக்கும் ? – கிரீத்தி ஷெட்டியின் ரசிகர்கள் அதிருப்தி.

0
732
krithishetty
- Advertisement -

சமீப காலமாகவே தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்பவர் கீர்த்தி ஷெட்டி. இவர் இளம் வயதிலேயே மாடலிங் துறையில் கால் பதித்தார். பின் தொடர்ந்து பல விளம்பர படங்களில் நடித்து தன்னுடைய அழகாலும் புன்னகையாலும் ரசிகர்களை கவர்ந்தார். பிரபல தெலுங்கு நடிகரும், மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மருமகன் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிப்பில் வெளியாகி இருந்த படம் உப்பனா. இந்தப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி ஷெட்டி.

-விளம்பரம்-

விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த நடிகை :

இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு மகளாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. மீண்டும் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் உடன் ‘2 கண்ட்ரிஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார். பின் லிங்குசாமி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழியிலும் உருவாகி இருக்கும் படத்தில் கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார்.

- Advertisement -

நானிக்கு ஜோடியாக கிரீத்தி ஷெட்டி :

இப்படி ஒரு நிலையில் இவர் தற்போது ‘ஷ்யாம் சிங்கா ராய்’ என்ற படத்தில் கீர்த்தி ஷெட்டி நடித்து இருக்கிறார். இந்தப் படத்தை இயக்குனர் ராகுல் சன்கிரித்யன் இயக்கியுள்ளார். இது மறுபிறவியை மையமாக கொண்டு உருவாகி உள்ள படம். இப்படத்தில் நானி, சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி, மடோனா செபஸ்டின், முரளி ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். மேலும், ‘ஷ்யாம் சிங்கா ராய்’ படம் டிசம்பர் 24 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

அதனால் இப்படத்தின் புரமோஷன் பணியில் எல்லாம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதுமட்டும் இல்லாமல் கொரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு நானி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் முதல் படமாக ‘ஷ்யாம் சிங்கா ராய்’ அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக நானி நடிப்பில் உருவான ‘வி’ மற்றும் ‘டக் ஜெகதீஷ்’ ஆகிய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளன. இப்படத்தில் நானி இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

ஷ்யாம் சிங்கா ராய் ட்ரைலர் :

இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் இருந்த நிலையில் ட்ரைலர் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், ட்ரைலரில் நானி இரட்டை வேடங்களில் ஒன்று 1960 காலங்களில் இருப்பவராகவும், மற்றொன்று 2020க்குள் சேர்ந்தவர் எனவும் காட்டுகிறது. தற்போதைய தலைமுறை நானி சினிமாவில் இயக்குனராக வேண்டும் என படம் எடுக்க முயற்சிக்கிறார். அப்போது அவர் படத்தில் கீர்த்தி செட்டியை கதாநாயகியாக வைத்து படம் பண்ணுகிறார்.

சர்ச்சை காட்சிகளில் கிரீட்டி ஷெட்டி :

அதில் கீர்த்தி ஷெட்டி புகை பிடிக்கும் காட்சி, கீர்த்தியை நானி காதலிப்பதாகவும், கீர்த்தி உடன் நானி மிக நெருக்கமான காட்சியில் நடித்தும் இருக்கிறார். தற்போது இந்த டிரைலரைப் பார்த்த பார்வையாளர்கள் பயங்கரமாக விமர்சித்து வருகின்றன. அதுமட்டுமில்லாமல் கீர்த்தி செட்டிக்கு 17 லிருந்து 18 வயது தான் ஆகி இருக்கும். இப்படி இருக்கும் நிலையில் 37 வயதுடைய நானி ஒரு மைனர் பெண்ணை காதலிப்பதும், நெருக்கமான காட்சியில் நடிப்பதும் தவறு என்றும் இந்த காட்சி எடுக்கும்போது கீர்த்தி செட்டிக்கு 16 வயது தான் இருந்திருக்கும்.

ரசிகர்கள் நானிக்கு கேள்வி :

அப்படி இருக்கும் போது நானி கொஞ்சம் யோசித்திருக்கலாம். இந்த மாதிரி காட்சிகளை எடுக்கும் போது நானி புத்திசாலித்தனமாக யோசித்து இருக்கலாம் என்றும் நானி தன்னுடைய புதிய படத்தில் வயதுக்குட்பட்ட பெண்ணுடன் நடித்தால் நன்றாக இருக்கும் என்றும் பல்வேறு விதமாக விமர்சித்து வருகிறார்கள். இதற்கு ஷியாம் சிங்கார ராய் படத்தின் படக்குழுவினர் தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement