சரித்தரன் செய்த prankஆல் கதறி அழுத கிரீட்டி ஷெட்டி – இப்படி பண்ணா அழுதுடுவாங்கலாம் (அப்போ பாலா படத்துல எப்படி சமாளிக்க போறாங்களோ)

0
829
kreethi
- Advertisement -

பிராங்கில் நடந்த விபரீதத்தில் பொது நிகழ்ச்சியில் நடிகை கீர்த்தி செட்டி கதறி அழுத வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்பவர் கீர்த்தி ஷெட்டி. இவர் இளம் வயதிலேயே மாடலிங் துறையில் கால் பதித்தார். பின் தொடர்ந்து இவர் விளம்பர படங்களில் நடித்து தன்னுடைய அழகாலும் புன்னகையாலும் ரசிகர்களை கவர்ந்தார். மேலும், பிரபல தெலுங்கு நடிகரும், மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மருமகன் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிப்பில் வெளியாகி இருந்த படம் உப்பனா. இந்தப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார் நடிகை கீர்த்தி ஷெட்டி. இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு மகளாக கீர்த்தி ஷெட்டி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. மீண்டும் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் உடன் இனைந்து கீர்த்தி ஷெட்டி நடித்து இருந்தார். சமீபத்தில் நானி நடிப்பில் வெளியாகி இருந்த ‘ஷ்யாம் சிங்கா ராய்’ என்ற படத்தில் கீர்த்தி ஷெட்டி நடித்து இருந்தார். இந்தப் படத்தை இயக்குனர் ராகுல் சன்கிரித்யன் இயக்கி இருந்தார். இது மறுபிறவியை மையமாக கொண்டு உருவாகி இருந்த படம். இப்படத்தில் நானி, சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி, மடோனா செபஸ்டின், முரளி ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தார்கள்.

- Advertisement -

கீர்த்தி செட்டி நடிக்கும் படம்:

மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி இருந்தது. அதோடு இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து தமிழில் சூர்யா – பாலா கூட்டணியில் உருவாகும் படத்தில் கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார் என்ற தகவல் இணையத்தில் வைரலாக பரவி வந்தது.

-விளம்பரம்-

கீர்த்தி செட்டி நடித்த படம்:

அதுமட்டுமில்லாமல் ஏப்ரல் முதல் வாரமே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. தற்போது கீர்த்தி செட்டி அவர்கள் தெலுங்கில் உருவாகும் தி வாரியார் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் ராம் போதினினி கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்திற்கு டிஎஸ்பி இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிம்பு பாடிய புல்லட் எனும் பாடல் சோசியல் மீடியாவில் பயங்கரமாக வைரலாகி இருக்கிறது.

பொது நிகழ்ச்சியில் நடந்த பிராங்க்:

இதுமட்டும் இல்லாமல் கீர்த்தி செட்டி தமிழ், தெலுங்கு என பிற மொழி படங்களிலும் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் பிராங்கில் நடந்த விபரீதத்தில் பொது நிகழ்ச்சியில் நடிகை கீர்த்தி செட்டி கதறி அழுத வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், சமீபத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கீர்த்தி செட்டி கலந்துகொண்டிருந்தார். அப்போது அவரிடம் பேட்டி எடுப்பது போல் நிகழ்ச்சி நடத்தி இருந்தார் பிரபல prankster சரித்திரன். அப்போது திடீரென்று கீர்த்தி செட்டி முன்னால் தனது துணை தொகுப்பாளர் உடன் prankster சரித்திரன் சண்டை போட்டிருக்கிறார்.

Surya – Bala Movie Start: Kirti Shetty joins as the heroine - time.news -  Time News

நிகழ்ச்சியில் கீர்த்தி ஷெட்டி அழ காரணம்:

பின் சண்டை முத்தி அவரை பளாரென்று கன்னத்தில் அடித்து பிராங்க் செய்திருக்கிறார். இதை பார்த்த கீர்த்தி ஷெட்டி ஷாக்காகி அழுதிருக்கிறார். மேலும், இந்த மாதிரி எல்லாம் பண்ணாதீர்கள்! எனக்கு கோபமாக பேசினால் கூட எனக்கு பிடிக்காது என்று அழுது கொண்டே சொல்லிருக்கிறார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இப்படி எல்லாம் பிராங்க் பண்ணுவீர்களா? என்றெல்லாம் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement