இந்த இளம் வயதிலேயே தன் தாய் தந்தை பெயரில் கிரிட்டி ஷெட்டி ஆரம்பித்துள்ள விஷயம்.

0
335
- Advertisement -

நடிகை கீர்த்தி ஷெட்டி தொடங்கியுள்ள தொண்டு நிறுவனம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சமீப காலமாகவே தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்பவர் கீர்த்தி ஷெட்டி. இவர் இளம் வயதிலேயே மாடலிங் துறையில் கால் பதித்தார். பின் இவர் விளம்பர படங்களில் நடித்து தன்னுடைய அழகாலும் புன்னகையாலும் ரசிகர்களை கவர்ந்தார். பிரபல தெலுங்கு நடிகரும், மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மருமகன் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிப்பில் வெளியாகி இருந்த படம் உப்பனா.

-விளம்பரம்-

இந்தப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக கீர்த்தி ஷெட்டி நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. மீண்டும் இவர் வைஷ்ணவ் தேஜ் உடன் இணைந்து ‘2 கண்ட்ரிஸ்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். பின் லிங்குசாமி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழியிலும் உருவாகி இருக்கும் படத்தில் கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார்.

- Advertisement -

கீர்த்தி ஷெட்டி திரைப்பயணம்:

மேலும், நானி நடிப்பில் வெளிவந்த ‘ஷ்யாம் சிங்கா ராய்’ என்ற படத்தில் கீர்த்தி ஷெட்டி நடித்து இருக்கிறார். இந்தப் படத்தை இயக்குனர் ராகுல் சன்கிரித்யன் இயக்கி இருக்கிறார். இது மறுபிறவியை மையமாக கொண்டு உருவாகி இருந்த படம். இப்படத்தில் நானி, சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி, மடோனா செபஸ்டின், முரளி ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர் . அதன் பின் சமீபத்தில் வெளியான தி வாரியார் என்ற படத்தில் கீர்த்தி ஷெட்டி நடித்திருந்தார்.

கீர்த்தி ஷெட்டி நடிக்கும் படம்:

இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகி ரசிகர்கள் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த பாடத்தில் இடம் பெற்ற புல்லட் பாடல் ரசிகர்கள், பிரபலங்கள் அனைவரும் மத்தியில் கவர்ந்திருந்தது. இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் படத்தில் கீர்த்தி செட்டி நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் சூர்யா – பாலா கூட்டணியில் உருவாகி வரும் வணங்கான் படத்திலும் கீர்த்தி செட்டி நடிக்கிறார்.

-விளம்பரம்-

கீர்த்தி ஷெட்டி தொடங்கிய தொண்டு நிறுவனம்:

இந்த படத்தின் படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 20 ஆண்டுகளுக்கு பிறகு பாலா-சூர்யா கூட்டணியில் உருவாகும் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் சமீபத்தில் தான் கீர்த்தி ஷெட்டி சினிமாவிற்கு வந்து ஓராண்டு நிறைவானதை அடுத்து விழாவை கொண்டாடியிருந்தார். இந்த நிலையில் இந்த விழாவை முன்னிட்டு இவர் நிஷ்னா என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கி இருக்கிறார்.

தொண்டு நிறுவனம் குறித்து கீர்த்தி ஷெட்டி சொன்னது:

இது குறித்து கீர்த்தி ஷெட்டி கூறியது, என் சினிமா பயணம் தொடங்கி ஓராண்டு ஆனதை நினைத்து மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்கு காரணமாக இருந்த அனைவருக்குமே என்னுடைய நன்றி. என்னுடைய வாழ்க்கை பயணத்தில் முக்கிய அங்கமாக நிஷ்னா என்ற பெயரில் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறேன். நிஷ்னா என்பது என்னுடைய பெற்றோர்களின் பெயர்களை இணைத்து உருவாக்கப்பட்ட சொல். இந்த தொண்டு நிறுவனத்தின் மூலம் என்னால் முயன்ற உதவிகளை என்னுடைய ரசிகர்களுக்கும், மக்களுக்கும் செய்ய இருக்கிறேன். இதற்கு உங்களுடைய வழிகாட்டுதலும், ஆதரவும் வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

Advertisement