பிகில் படத்தை கேலி செய்ததாக KRK படத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விஜய் ரசிகர்கள். அதுவும் எந்த காட்சியை பாருங்க.

0
677
Bigil
- Advertisement -

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை விமர்சித்து விஜய் ரசிகர்கள் போடும் பதிவுகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் விக்னேஷ் சிவன். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் நடிகர், திரைப்பட பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்குகிறார். தற்போது இவர் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், கலா மாஸ்டர் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளர்கள். இப்படத்தினை விக்னேஷ் சிவன் மற்றும் லலித்குமார் இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி- நயன்தாரா- விக்னேஷ் சிவன் கூட்டணியில் வெளியாகியுள்ள படம் காத்துவாக்குல 2 காதல். இந்த படம் முழுக்க முழுக்க ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி இருக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பல எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் இன்று வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தில் விஜய் சேதுபதி- ராம்போ, சமந்தா – கதீஜா, நயன்தாரா- கண்மணி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

- Advertisement -

காத்துவாக்குல 2 காதல் படம்:

இந்த படத்தில் விஜய் சேதுபதி அதிஷ்டம் இல்லாதவராக இருக்கிறார். எது வேண்டும் என்று நினைத்தாலும் அது அவரை விட்டு செல்கிறது. இந்த நிலையில் இவருடைய வாழ்க்கையில் சமந்தா, நயன்தாரா இருவரும் வருகிறார்கள். இருவரையுமே விஜய் சேதுபதி காதலிக்கிறார். இறுதியில் இருவருமே விஜய்சேதுபதிக்கு கிடைத்தார்களா? இல்லையா? விஜய்சேதுபதியின் வாழ்க்கையில் வேற என்ன மேஜிக் நடந்தது? என்பதே படத்தின் மீதி கதை. மேலும், பெரிய எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பிகில் படத்தில் இருந்து ரீ கிரேட் செய்த காட்சி:

இந்த நிலையில் தற்போது இந்த படத்தை விஜய் ரசிகர்கள் விமர்சித்து வருவது சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அது என்னவென்றால், இப்படத்தில் ஒரு காட்சியில் விஜய்யின் பிகில் படத்தில் வரும் முக்கிய காட்சியை ரீ கிரேட் செய்துள்ளனர். அதில் ரெடின் கிங்ஸ்லி விஜய் போல வசனம் பேசி நடித்துள்ளார். அதாவது பிகில் படத்தில் அசிட் அடித்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விஜய் மோட்டிவேஷனலாக பேசி இருப்பார். அந்த காட்சியை தான் இந்த படத்தில் ரீ கிரேட் செய்திருக்கின்றனர்.

-விளம்பரம்-

விஜய் ரசிகர்கள் விமர்சிக்க காரணம்:

மேலும், படத்திலேயே பெரிய கரகோசத்தை உண்டாக்கிய இந்த காட்சியை குறித்து விஜய்யின் ரசிகர்கள், சிறந்த காட்சியை இப்படி செய்திருக்கக் கூடாது என்று சோசியல் மீடியாவில் கண்டனம் தெரிவித்தும், காத்துவாக்குல 2 காதல் படத்தை விமர்சித்தும் கமெண்ட்ஸ் போட்டு வருகிறார்கள். இதற்கு காத்துவாக்குல 2 காதல் படக்குழுவினர் தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய்.

பிகில் படம் பற்றிய தகவல்:

இவரது படங்கள் என்றாலே வசூல் ரீதியாக சாதனை படைத்து வருகிறது. தெறி, மெர்சல் போன்ற படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்து அட்லி மற்றும் விஜய்யின் கூட்டணியில் வெளியாகி இருந்த படம் பிகில். இந்தப் படத்தில் நடிகர் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், இந்த படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராப், ஆனந்தராஜ், யோகிபாபு, விவேக், கதிர், இந்துஜா, டேனியல் பாலாஜி என்று ஒரு மாபெரும் நடிகர் பட்டாளமே நடித்து இருந்தது. பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று இருந்தது.

Advertisement