‘பிரிசன் பிரேக்’ திரில்லர் – எப்படி இருக்கிறது ”Thugs ” – முழு விமர்சனம் இதோ.

0
1535
- Advertisement -

மலையாளத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான “சுதந்திரமும் அர்த்தராத்திரியில்” என்ற படத்தை மையமாக கொண்டு தற்போது தமிழில் உருவாகியுள்ள திரைப்படம் தான் “குமரி மாவட்டத்தின் தக்ஸ்”. இப்படத்தை இயக்குனர் பிருந்தா இயக்க ஹெச்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படத்தில் அறிமுக நாயகனாக பிரபல தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸின் வாரிசான ஹர்து ஹாரூன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் சிம்ஹா, முனிஸ் காந்த், ஆர்.கே.சுரேஷ், அம்பானி சரத், இரட்டையர்கள் அருண், அரவிந்த் தேனப்பா என பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். “பிரிசன் பிரேக்” திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் கடந்த 24ஆம் தேதி வெளியான நிலையில் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

கதைக்களம் :

கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கைதாகி சிறைக்கும் செல்லும் கதாநாயகன் அங்கிருந்து தப்பித்து எப்படியாவது தன்னுடைய காதலியுடன் வெளிநாட்டிற்கு சென்று விடவேண்டும் என்று நினைக்கிறார். எனவே சிறையில் இருந்து தப்பித்து வெளியில் வர அங்குள்ள நண்பர்களின் உதவியுடன் திட்டம் போடுகிறார். இந்த திட்டம் மூலம் இவர்கள் சிறையில் இருந்து சுரங்கம் வெட்டி தப்பிக்க முயற்சி செய்கின்றனர். இந்த முயற்சியில் இவர்கள் வென்றனரா? மீண்டும் தன்னுடைய காதலியை கதாநாயகன் சந்தித்தாரா? என்பதுதான் மீதி கதை.

- Advertisement -

அறிமுக நாயகனாக இருந்தாலும் ஹாரூன் நன்றாக நடித்திருக்கிறார். அதோடு இவருடன் வரும் மற்ற கதாபாத்திரங்கள் கதைக்கு தேவையானவற்றை செய்திருக்கின்றனர். சிறை மற்றும் சிறையை மையமாக கதை நகருவத்தினால் ஒரு ஜெயில் செட் அமைத்து படம் எடுத்திருகின்றனர். ஆனால் 100 பேர் மட்டுமே இருக்கும் சிறிய சிறையாக இருந்தாலும் கூட இவர்கள் சுரங்கம் வெட்டுவது கிளைமாக்ஸ் காட்சி வரையில் யாருக்கும் தெரியாமல் இருப்பது படத்தின் உண்மை தன்மையை குறைக்கிறது. அதே போல ஒரு சுரங்கம் தோண்டுவது யாருக்கும் தெரியாத காரணத்தினால் “பிரிசன் பிரேக்” படத்திற்கான அந்த விறுவிறுப்பு இல்லை.

கொலைக் குற்றவாளியாக வரும் பாபி சிம்ஹா கதாநாயகனின் திட்டத்திற்கு உதவி செய்கிறார். அதே போல முனீஸ் காந்த் படத்தோடு ஒன்றி நகைச்சுவை செய்கிறார். ஒரு சிறை சிறையில் நடக்கும் காட்சிகள், ஒரே செல் என இருக்காமல் லைட்டிங், ஷேடோஸ், பலவிதமான கேமெரா கோணங்கள் மூலம் போரடிக்காமல் வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரியேஷ் குருசாமி. அதே போல ஒலிப்பதிவிலும், பின்னணி இசையிலும் படத்திற்கு தேவையானதை செய்திருக்கிறார் இசையமைப்பாளர் சாம்.

-விளம்பரம்-

அறிமுக நாயகனை வைத்து இரண்டாவது படத்தை இயக்கும் இயக்குனர் பிருந்தா அந்த முயற்ச்சியில் வெற்றிபெற்றுளார் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் கதாநாயகியாக வரும் அனஸ்வரா ராஜன் சில காட்சிகள் மட்டுமே நடித்திருக்கிறார்.பேக் ஸ்டோரி படத்தில் சொன்னாலும் இவர்கள் சிறையில் இருந்தது தப்பிக்க முயற்சி செய்யும் போது நமக்கு இவர்கள் எப்படியாவது வெளியில் வந்துவிட வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும். அப்படி இல்லாதது ஏமாற்றமே.

குறை :

திருப்பங்கள் இல்லாத கதை.

கதாநாயகிக்கு வேலையில்லை.

அதிக லாஜிக் குறைபாடுகள்.

சில கதாபாத்திரங்கள் கதைக்கு பொருந்தவில்லை.

நிறை :

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, கொரியோகிராபில் சூப்பர்.

அறிமுக கதாநாயகனின் நடிப்பு ஓகே.

மொத்தத்தில் சில காட்சிகளில் விறுவிறுப்பு கூட்டி, அவர்கள் தப்பிக்கும் காரணத்தை இன்னமும் அழுத்தமாக கூறியிருந்தால் கண்டிப்பாக சூப்பர் ஹிட் அடித்திருக்கும் இந்த “குமரி மாவட்டத்தின் தக்ஸ்” திரைப்படம்.

Advertisement