கள்ளக்காதலனுக்காக குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த அபிராமியின் சகோதரர் தற்கொலை

0
4436
- Advertisement -

சமீபகாலமாகவே சோஷியல் மீடியாவினால் பல நபர்களின் வாழ்க்கை சீரழிந்து வருகிறது. அந்த வகையில் சென்னை குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்தவர் தான் அபிராமி. இவர் டிக் டாக் செயலி மூலம் பிரபலமானவர். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு கள்ளக்காதல் விவகாரத்தில் தனது இரண்டு குழந்தைகளையும் பாலில் தூக்க மாத்திரை கொடுத்து தலையணையால் அமுக்கி கொடூரமான முறையில் கொலை செய்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது அனைவருக்கும் தெரிந்ததே.

-விளம்பரம்-
kundrathur abirami case | குன்றத்தூர் அபிராமி வழக்கு

இந்த நிலையில் தற்போது அபிராமியின் சகோதரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அபிராமியின் தம்பி பெயர் பிரசன்னா மணிகண்டன். இவர் வங்கியில் பணியாற்றி வருகிறார். இவர் பெற்றோருடன் மாங்காடு அடுத்த பெரியபணிச்சேரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றார். இவர் பெரம்பூரில் வசித்து வந்த வேலூரை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதுபற்றி அறிந்த இருதரப்பு பெற்றோர்களும் இவர்களுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

இதையும் பாருங்க : கெட்டுப்போன இறைச்சி, சீல் செய்யப்பட்ட பிரியாணி கடை – இர்பான் வீடியோவை கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

- Advertisement -

கடந்த சில தினங்களுக்கு முன் இவர்களுக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்தது. இந்த நிலையில் பிரசன்னா காதலித்த பெண்ணின் வீட்டிற்கு அபிராமி விவகாரம் தெரியவந்தது. இதனால் அவர்கள் திருமண ஏற்பாடுகளை நிறுத்தினார். அந்த இளம் பெண்ணும் பிரசன்னாவின் தொடர்பை துண்டித்து உள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த பிரசன்னா அதிகாலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கள்ளக்காதலுக்காக குழந்தைகளை கொலை செய்த அபிராமியின் சகோதரர் தற்கொலை! |  Bhoomitoday
அபிராமி சகோதரர்

இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் பிரசன்னாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement