ஆடம்பர செலவு…சமைக்க மாட்டா…ஊர் சுத்துவா..சுந்தரத்துடன் 7 நாள்.! அபிராமி பெற்றோர் குமுறல்.!

0
1587
abirami
- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கள்ள காதலுக்காக தனது கணவர் மற்றும் பெற்ற பிள்ளைகளையே கொள்ள நினைத்த அபிராமி தற்போது சிறையில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்.இந்நிலையில் அபிராமியின் தந்தை அபிராமி பற்றியும் குணத்தை கூறி அவருக்கு ஜாமீன் எடுக்கபோவது இல்லை என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-

sundharama and abirami

- Advertisement -

அபிராமி குறித்து அவரது தந்தை பேசுகையில் , அவள் விஜய்யை காதலிப்பதாக சொன்னப்போ, அதற்கு நாங்க சம்மதம் தெரிவிச்சோம். அப்புறம் ரெண்டு பேருக்கும் கல்யாணம் செஞ்சி வெச்சோம். அவ சந்தோசமா வாழணும்னு விஜய் ரொம்ப கஷ்டப்பட்டாரு. அவங்க வாழ்க்க நல்லா தான் போயிடு இருந்துச்சி. ஆன இவ ரெண்டு பசங்க பொறந்து கூட உதாறித்தனமா செலவு பண்ணிட்டு இருந்தா.

வீட்ல சமைக்கமாட்டா ஹோட்டல்ல ஆர்டர் பண்ணி சாப்பிட்டு ஜாலியா இருப்பா. அவளோட பொறந்தநாளுக்கு விஜய் வாங்கி கொடுத்த வண்டில ஊர சுத்துனா. அவளுக்கு சுந்தரத்தோட தொடர்பு இருக்குனு தெரிஞ்சி பல தடவ அவள கண்டிச்சோம். ஆன கடைசி வரைக்கும் அவ கேக்கள.

-விளம்பரம்-

Abirami

நான் கண்டிச்சதால கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் சுந்தரம் வீட்ல போய் தங்கிட்டா…அப்புறம் அங்க போய் அவள அடிச்சி இழுத்துட்டு வந்து விஜய் வீட்ல விட்டேன்.நான் அப்போவே போலீஸ் கிட்ட போய் இருந்தா இந்நேரம் என் பேர பசங்க உயிரோட இருந்திருப்பாங்க.

அந்த பசங்க என்ன தாத்தா தாத்தானு கூப்டது இன்னும் என் காதுல கேட்டுட்டே இருக்குங்க. அவளுக்கு இந்த ஜெயில் தண்டனை தேவ தான் அவளுக்கு கண்டிப்பா நாங்க ஜாமீன்லா கேக்க மாட்டோம், என்று மிகவும் ஆவேசத்துடன் பேசியுள்ளார்.

Advertisement