பொதுவாகவே சினிமா உலகில் பல நடிகர், நடிகைகள் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு பிறகு என்ன ஆனார்கள்? என்று இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுகின்றனர். இதற்கு காரணம் படவாய்ப்புகள் கிடைக்காததும், புதுமுக நடிகைகள் வந்த வண்ணம் உள்ளது என்று கூறப்படுகிறது. அதிலும் சில நடிகர், நடிகைகள் படம் பெரிய அளவு வெற்றி பெறவில்லை என்றாலும் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து வருகிறது. ஆனால், இதையெல்லாம் முறியடித்து பல நடிகைகள் பல ஆண்டுகாலமாக திரையுலகில் சாதனை செய்து வருகிறார்கள்.
நயன்தாரா, திரிஷா, சமந்தா என்று பல நடிகைகள் சினிமா உலகில் இன்னும் முன்னணி நடிகையாக திகழ்கிறார்கள். ஆனால், ஒரு சில படங்களில் நடித்தாலும் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த நடிகைகள் சிலரும் உள்ளார்கள். அந்த வகையில் குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமான நடிகை தனன்யா. 2009 ஆம் ஆண்டு ராமகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த படம் தான் குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும். இந்த படத்தை ராஜ மோகன் இயக்கியிருந்தார். எஸ்பிபி சரண் இந்த படத்தை தயாரித்திருந்தார்.
இதையும் பாருங்க : விரைவில் தன் தங்கை திருமணம், 8 மாத கர்ப்பம். இப்படி ஒரு நிலையில் மொட்டை அடித்துகொண்ட நிக்கியின் அக்கா. அவர் சொன்ன காரணம்.
குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் படம்:
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். மேலும், இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தின் மூலம் பல புதுமுக நடிகர் நடிகைகள் அறிமுகம் ஆகி இருந்ததார்கள். அதில் இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் தனன்யா. இந்நிலையில் இந்த படத்திற்கு பிறகு தனன்யா என்ன ஆனார்? தற்போது இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம்.
தனன்யா பற்றிய தகவல்:
தனன்யா சென்னையில் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். இவர் இரண்டாம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்துக்கொண்டு இருக்கும் போதே படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதுவும் முதல் படத்திலேயே இவர் கதாநாயகியாக அறிமுகமானார். மேலும், குங்குமபூவும் கொஞ்சும் புறாவும் படத்தில் இவருடைய நடிப்பு பாராட்டும் வகையில் இருந்தது. இந்த படத்தின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி அடையாளத்தை கொடுத்தது. இந்த படத்தின் மூலம் தனன்யா பிரபலமாக இருந்தாலும் இந்த படத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் ஏதும் வராத நிலையில் இவர் மீண்டும் தன்னுடைய மருத்துவப் படிப்பைத் தொடர ஆரம்பித்து விட்டார்.
தனன்யா நடித்த படங்கள்:
அதுமட்டுமில்லாமல் ஆரம்பத்தில் இவர் படங்களில் நடிப்பதை பெற்றோர்களும் விரும்பவில்லை. தன்னுடைய படிப்பின் விடுமுறையில் தான் இவர் படத்தில் நடித்திருந்தார். பிறகு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றவுடன் தன்னுடைய மருத்துவ படிப்பை முடித்துவிட்டு மருத்துவராக பணியாற்றி வந்தார். தனன்யா நீண்ட இடைவெளிக்கு பிறகு வெயிலோடு விளையாடி என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இருந்தாலும் இந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி கிடைக்கவில்லை. உடனே இவர் மீண்டும் தன்னுடைய மருத்துவ துறைக்கு திரும்பிவிட்டார்.
தனன்யா- ஜியோன் ஆர்யன் திருமணம்:
அதற்கு பிறகு தனன்யா அவர்கள் சினிமாவை விட்டு விட்டு தன்னுடைய முழு கவனத்தையும் மருத்துவத்தில் செலுத்தி வந்தார். பின் 2015 ஆம் ஆண்டு ஜியோன் ஆர்யன் என்பவரை தனன்யா திருமணம் செய்து கொண்டார். அதற்கு பின் அவர் என்ன ஆனார்? எப்படி இருக்கிறார்? என்று தகவல் தெரியாத நிலையில் தற்போது இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தில் தனன்யா தன் கணவருடன் சேர்ந்து இருக்கிறார். இதை பார்த்த பலரும் குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் பட நடிகையா இது! செம அழகாக இருக்கிறாரே! என்று கமெண்ட்ஸ், லைக்ஸ்குகளை போட்டும் புகைப்படத்தை வைரலாகியும் வருகிறார்கள்.