விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலில் மகாநதி சீரியலும் ஒன்று. இந்தத் தொடரில் நான்கு சகோதரிகளை மையமாக வைத்து கதை நகர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த சீரியல் கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கி இருக்கிறார். இந்த சீரியலில் சந்தானம் என்ற நபர் தன் குடும்பத்தை விட்டு துபாயில் வேலை செய்து வருகிறார். அவருடைய குடும்பத்தினர் கொடைக்கானலில் வசித்து வருகின்றார்கள்.

அவருக்கு மூத்த மகள் கங்காவும் இரண்டாவது மகள் காவேரியும், மூன்றாவது மகள் யமுனா, கடைசி மகள் நர்மதா ஆவார்கள். இந்தத் தொடரின் ஆரம்பத்தில் நிவின்- காவிரி காதலித்தார்கள். மற்றொரு பக்கம் பசுபதி காவேரி தந்தைக்கு துரோகம் செய்து இருந்தார். இதை அனைத்தையும் தெரிந்து கொண்ட காவிரி, பசுபதி முகத்திரையை கிழித்தார். பின் காவிரி குடும்பம் சூழ்நிலை காரணத்தினால் கொடைக்கானலில் இருந்து சென்னைக்கு வந்தார்கள். பின் சென்னையில் அவர்கள் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்தார்கள்.
மகாநதி சீரியல்:
அந்த வீட்டின் உரிமையாளர் தான் விஜய். பின் காவிரி, விஜய் இடம் ஒரு வருட கான்ட்ராக்ட் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார். ஆரம்பத்தில் விஜய்-காவிரி இருவருக்கும் இடையே சண்டை மட்டும் தான் வந்து கொண்டு இருந்தது. அதற்கு பின் இருவரும் காதலிக்க தொடங்கி கணவன் மனைவியாகவே வாழ ஆரம்பித்து விட்டார்கள். தற்போது சீரியலில் காவிரிக்கு பழைய நினைவுகள் எல்லாம் மறந்ததால் தன்னுடைய விஜய், குழந்தையை பற்றி எந்த ஞாபகமே இல்லாமல் இருக்கிறார். வீட்டில் உள்ள யாருமே காவிரிக்கு பழைய நினைவுகளை நினைவு படுத்தவில்லை.

சீரியல் குறித்த தகவல்:
விஜய், காவிரியிடம் பழைய நினைவுகளை சொல்லாமல் இருக்கிறார். அதோடு ஆரம்பத்திலிருந்து காவிரிக்கு விஜயின் மீது கோபம் தான் இருக்கிறது. அவர் எது செய்தாலுமே குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். இருந்தாலும் விஜய் கோபப்படாமல் பொறுமையாக இருக்கிறார். அதற்குப்பின் கடந்த வாரம் தான் அம்முவிற்கு தன்னுடைய அம்மா யார் என்று உண்மை தெரிகிறது. பின் ராதா நடந்த எல்லாவற்றையுமே சொல்லி விடுகிறார். இதனால் அம்மு ரொம்பவே கவலையில் இருக்கிறார். பின் விஜய் தங்களுடைய காதல் கதை எடுத்துச் சொல்லி புரிய வைக்கிறார். காவிரிக்கு தானாகவே பழைய நினைவுகள் வரும் கவலைப்படாதே என்று அம்முவுக்கு ஆறுதலும் சொல்கிறார்.

அதிர்ச்சியில் ரசிகர்கள்:
காவேரி தான் தன்னுடைய அம்மா என்று தெரிந்தவுடன் அம்மு ரொம்பவே சந்தோசமாக இருக்கிறார். சீக்கிரமாகவே காவேரிக்கு பழைய நினைவுகள் திரும்ப வேண்டும் என்று ரசிகர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் மகாநதி சீரியல் குழுவினர் கொடுத்திருக்கும் ஷாக்கிங் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, மகாநதி சீரியல் முடிவடைய இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மகாநதி சீரியல் கடைசி நாள் ஷூட்டிங் தான்
நடந்திருக்கிறது. கடைசி நாள் படப்பிடிப்பின் போது கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள். இது தொடர்பான போட்டோ வீடியோக்கள் எல்லாம் வைரலாகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் ஷாக்காகி இருக்கிறார்கள். காவிரிக்கு நினைவு வந்து விட்டதா? எதற்காக சீரியலை முடிக்கிறீர்கள்? என்றெல்லாம் கேட்டு வருகிறார்கள்






