குப்பத்து ராஜா படத்தின் ஹீரோயினின் டூ பீஸ் நீச்சல் உடை புகைப்படத்தை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கிய வருகிறார்கள். தமிழ் சினிமாவில் அறிமுக நடிகையாக திகழ்பவர் பலக் லால்வானி. இவர் தெலுங்கில் ஜூவா, அப்பயித்தோ அம்மாயி போன்ற சில படங்களில் நடித்து இருக்கிறார். ஆனால், அவருக்கு தெலுங்கில் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்றவுடன் தமிழுக்கு தாவி விட்டார். தமிழில் சகா என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார். ஆனால், அந்த படம் இன்னும் வெளியாகவில்லை.
அந்த படத்தை தொடர்ந்து இவர் குப்பத்து ராஜா என்ற படத்தில் நடித்திருக்கிறார். இயக்குனர் பாபா பாஸ்கர் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் குப்பத்து ராஜா. இந்த படத்தை சரவணன் சிராஜ், சரவணன் தயாரித்து இருந்தார்கள். மேலும், இந்த படத்தில் ஜி. வி. பிரகாஷ் குமார், பார்த்திபன், பூனம் பஜ்வா, யோகிபாபு உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக பலக் லால்வானி நடித்திருந்தார்.
இந்த படத்தின் மூலம் இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார். இதை தொடர்ந்து இவர் ஆதி, ஹன்சிகா நடிக்கும் பார்ட்னர் என்ற படத்திலும் நடித்திருக்கிறார். குப்பத்து ராஜா படத்தின் ரிலீசுக்கு முன் தான் நடித்த படத்தை குறித்து பலக் லால்வானி பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பது, இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது எனக்கு உற்சாகம் இருந்தாலும் பதட்டம் கலந்த ஒரு பயம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த படம் முழுக்க முழுக்க லோக்கல் பின்னணியை கொண்ட கதையாக இருக்கிறது.
அதோடு அந்த லோக்கல் ஏரியாவிற்கு ஏற்ற தமிழை மிக சரியாக பேச வேண்டும். நான் பேசும் வசனங்களில் எனக்கு பொறுமையாகவும் சுலபமாகவும் இயக்குனர் பாபா பாஸ்கர் ஜி வி பிரகாஷ் சொல்லித் தந்தார்கள். இந்த தருணத்தில் அவர்களுக்கு நன்றி சொல்கிறேன். இந்த படம் முழுக்க சென்னையின் சேரி பகுதியை கொண்டு கதை நடக்கிறது. அங்கு வாழும் ஒரு பெண்ணாகத்தான் நான் படத்தில் நடித்திருக்கிறேன். சும்மா வந்து போகும் கதாபாத்திரம் இல்லாமல் குப்பத்து ராஜா படத்தில் எனக்கும் ஒரு முக்கியமான பங்கு இயக்குனர் கொடுத்திருக்கிறார்.
ரசிகர்கள் என்னுடைய நடிப்பை பாராட்டும் நாளுக்காக காத்து கொண்டு இருக்கிறேன் என்று அவர் கூறியிருந்தார். பின் இந்த படத்திற்கு பிறகு இவரை வேறு எந்த படத்திலும் காணவில்லை. இந்த நிலையில் இவருடைய டூ பீஸ் நீச்சலுடை புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. டூ பீஸ் உடையில் நடிகை பலக் லால்வானி பயங்கர கிளாமராக மிரட்டி இருக்கிறார். அதோடு ஜொள்ளு விடுமளவிற்கு அம்மனி பயங்கரமாக போஸ் கொடுத்திருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.