அஜித்தை அரசியலுக்கு அழைத்த சுசீந்திரன்.! கலாய்த்து ட்வீட் செய்த சிம்புவின் தம்பி.! கோபத்தில் ரசிகர்கள்.!

0
721
kuralarasan

சினிமாவில் உள்ள பல்வேறு நபர்கள் தற்போது அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். ரஜினி, கமல் துவங்கி விஷால் வரை தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பிரபல இயக்குனரான சுசீந்திரன் நடிகர் அஜித்தை அரசியலுக்கு அழைத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் ஒட்டுமொத்த தமிழகமுமே பரபரப்பாக இயங்கி வருகிறது. சினிமா துறையில் இருக்கும் சில பிரபலங்களும் அரசியலுக்குள் வந்துவிட்டனர். இந்நிலையில் அஜித்துக்கு கடிதம் எழுதுவது போல் இயக்குநர் சுசீந்திரன் ட்வீட் ஒன்றைபதிவிட்டிருந்தார்.

- Advertisement -

அதில், ”40 ஆண்டு கால திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். தமிழக மக்களின் நலன் கருதி உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறேன். இதுதான் 100% சரியான தருணம். வா தலைவா, மாற்றத்தை உருவாக்கு.., உங்களுக்காக காத்திருக்கும் பலகோடி மக்களில் நானும் ஒருவன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் சுசீந்திரனின் இந்த பதிவிற்கு ரீ ட்வீட் செய்திருந்த டி ராஜேந்திரனின் இளைய மகன் குறளரசன், இதனால் அஜித் ரசிகர்கள் கடும் கோபத்திற்கு உள்ளாகினர். ஆனால், அந்த பதிவை ஆனால், இதில் குரல் அரசன் என்கிற பெயருக்கு பதிலாக குரான் அரசன் என ட்விட்டர் கணக்கு பெயர் உள்ளதால், இது போலி ட்விட்டர் கணக்காக இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது

-விளம்பரம்-
Advertisement