‘உண்மை சம்பவம்’ எப்படி இருக்கிறது துல்கர் சல்மானின் குருப் – முழு விமர்சனம் இதோ.

0
1899
kurup
- Advertisement -

இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள படம் குருப். இந்த படத்தில் ஷோபிடா துலிபலா அவர்கள் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு சுசின் ஷாம் இசையமைத்துள்ளார் மற்றும் நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், துல்கர் சல்மானின் குருப் படம் இன்று வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை இங்கு பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

- Advertisement -

கேரளாவில் இருந்த சுகுமார குரூப் என்பவரின் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவானது தான் குரூப் படம். குரூப் என்ற கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கிறார். படத்தில் துல்கர் சல்மான் விமானப் படையில் பயிற்சி எடுக்கிறார். பின் பாம்பேயில் வேலை செய்கிறார். உடல்நலக்குறைவு காரணமாக துல்கர் சல்மான் விடுமுறை எடுத்து செல்கிறார். சில நாட்களில் துல்கர் சல்மான் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகிறது. ஆனால், துல்கர் சல்மான் சாகவில்லை. உயிருடன் இருக்கும் துல்கர் சல்மான் தனது பெயரை குரூப் என்று மாற்றிக்கொண்டு வெளிநாடு செல்கிறார்.

வெளிநாட்டில் தனது பெயரில் இன்சூரன்ஸ் செய்துவிட்டு இந்தியா திரும்பினார். பிறகு அந்த இன்சூரன்ஸ் பணத்தை ஏமாற்றி அபகரிக்க நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைந்து துல்கர் சல்மான் முயற்சி செய்கிறார். இறுதியில் இன்சூரன்ஸ் பணத்தை துல்கர் சல்மான் ஏமாற்றினாரா? இல்லையா? ஏன் தற்கொலை செய்துகொண்டதாக சொல்லி ஊரை நம்ப வைக்கிறார்? இதனுடைய பின்னணி என்ன? என்பதெல்லாம் படத்தின் மீதி கதை. படத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக இருந்தாலும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், படத்தில் பல கெட்டப்பில் துல்கர் சல்மான் நடித்து இருக்கிறார். ஒவ்வொரு கெட்டப்பும் அவருக்கு கண கச்சிதமாக பொருந்தி இருக்கிறது என்று சொல்லலாம். துல்கர் நடை, உடை, ஆக்ஷன் என எல்லாமே வேற லெவலில் இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கிறார். படத்தில் கதாநாயகியாக நடித்த ஷோபிடா அவர்கள் கதைக்கு தேவையான அளவிற்கு தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மேலும், படத்தில் துல்கர் சல்மானின் உறவினராக வரும் ஷைன் டாம் சாக்கோவின் நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. படத்தில் அவருடைய சின்ன சின்ன அசைவுகளும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்துள்ளது. இந்த படத்தின் வெற்றிக்கு இவருடைய கதாபாத்திரமும் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம். இயக்குனர் ஸ்ரீநாத் அவர்கள் உண்மை சம்பவத்தை சினிமாவிற்கு ஏற்றார் போல் திரைக்கதையை அமைத்து இயக்கியிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் 1980களில் காலகட்டத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பது. அதற்கேற்றவாறு கதைகளில் அதிக கவனம் காட்சி அமைப்பு போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தி இருக்கிறார் படத்தில் படம் கொண்டு போன விதம் காட்சிகள், ஒளிப்பதிவு என அனைத்தும் பாராட்டுக்குரிய வகையில் இருந்தது. படத்தில் முதல் பாதி ஒன்னும் புரியாமல் இருந்தாலும் இரண்டாம் பாதியில் தெள்ளத்தெளிவாக காண்பித்துள்ளார் ஸ்ரீநாத்.

பிளஸ்:

படத்தில் நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.

துல்கர் சல்மான் உடைய நடிப்பு வேற லெவல்.

உண்மை சம்பவம் என்பதால் படம் ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்திருக்கிறது.

படத்திற்கு ஒளிப்பதிவும், பின்னணி இசையும் பக்கபலமாக அமைந்திருக்கிறது.

மைனஸ்:

படத்தில் சொல்லிக்கொள்ளும்படியான அளவிற்கு குறைகள் எதுவும் இல்லை.

முதல் பாதி தான் கொஞ்சம் குழப்பம்.

நீண்ட நாட்களுக்கு பிறகு துல்கர் சல்மானின் குருப் படம் ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்து வரவேற்கப்பட்டு உள்ளது.

மொத்தத்தில் ‘குருப்–உச்சத்திற்கு செல்வார்’ என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement